Wednesday, March 4, 2009

உன் இழப்பு

உன் இழப்பு
என் இறப்பு
என் செய்வேன் என் தோழி
இறைவன் கொடுக்கவில்லை
இருவர் இணையும் வாரம்
இனியும் கிடைக்க போவதில்லை
உன் போல் ஒரு குணம்
இன்று முதல் இது என் நெஞ்சில்
என்றும் ஆறா ஒரு ரணம்
ஈடு செய்ய எண்ணுவாதை விட
இறந்த காலமாக்க எண்ணுகிறேன்
முடியவில்லை
நிழலாய் நீ வந்திருந்தால்
என் நினவுகளில் நின்றிருக்கமாட்டாய்
நிஜமாய் வந்தவளே
உன் நெஞ்சினில் என்னைத் தைத்தவளே
எங்ஙனம் உனை மறப்பேன்
உனை மறந்தால் எங்ஙனம் இவ்வுலகில் இருப்பேன்
வளமொடு வாழ்க நீ
என்றும் என் மனதில் அணையாத தீ
- இவன்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...