Saturday, October 3, 2020

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில்

பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்   

பல் முளைத்து விடுமாஇல்லை 

பல்ப மிட்டாய் கசந்திடுமா   

மாடு கட்டா ஏறு கொண்டு

மண்ணை உழுத மடயனுக்கு   

மண்ணும் மனம் கனிந்திடுமா

இல்லை மாடு ஓடி வந்திடுமா   

போகும் வழியில் சில நேரம்

பொறுமை நம்மை நீங்கிப் போகும்   

அந்த பொறுமை சற்று குறைந்து விடின்

நம் பெருமையது குறைந்திடுமா   

போகட்டும் விட்டு விடு

வெறும் புகழ் தேடும் கூட்டம் அது   

சிங்கமாய் தன்னை நினைத்து

சினம் காட்டும் ஆடாய் கனைத்து


தனிமை

 தானாய் விரும்பினால் வரம்


தன்மீது திணிக்கப்படுகையில் ரணம்

கவிஞனுக்கு காதல்

காதலுக்கு வேதனை

இளையோருக்கு கனவு

முதியோருக்கு வலி

குழந்தைக்கு எதிர்பார்ப்பு


அது சுகம் என்று

எண்ணத்துணியும் சோகம்


Tuesday, February 12, 2019

பேருந்து பயணம்

சாலையோரம்
சகதி ஊடே
சற்றே சங்கடத்தோடு நின்றிருந்தேன்
தூரத்தில் வந்தது என் பேருந்து
ஏறும் வரை இருந்த சலிப்பு
கண்டதும் வந்தது ஓர் நகைப்பு
என்ன ஒரு அமைப்பு
ஏறினேன் உள்ளே
சொர்க்கமோயோசித்தேன்
இருபுறமும் தேவதைகள்
போதவில்லை என் இரு விழிகள்
கிட்டியது ஒரு இடம்
ஒரு தேவதையின் வலப்புறம்
இடிக்காமல் உள் நுழைந்தேன்
ஓடியது என் வாட்டம்
இனி போகும் வழி கொண்டாட்டம்

Tuesday, May 8, 2018

தலைவன்

தமிழ் எந்தன்
பேச்சு
தமிழே என் மூச்சு
என்று
வெறும் வார்த்தை பேசி
வியாபாரம் செய்யும்
விபச்சார தலைவர் பலர் உண்டு இங்கு
நம்மை  ஆள தேவை
ஒரு நிஜமான நேர்மை
அதில்  இன்னும் வேண்டும்
மிக நீண்ட பொறுமை

வரும் பலரும் இன்று
கை வரும் பலனைக் கண்டு
பாதைகள் மாற்றி தம்
பார்வையும் மாற்றினர்

வருவாரோ ஒருவர்
என்று எதிர்பார்க்கும் நேரம்
வந்திறங்கி பார்ப்போம்
தலைவன் அற்ற குறை தீர்ப்போம்

Saturday, April 11, 2015

மக்கள்
ஈரமில்லா சட்டை
சோர்வு இல்லா முகம்
வியர்வை ஆகா விரல்கள் 
நிற்க நினைக்கா கால்கள்
பறக்க துடிக்கும் கைகள்
பக்கத்தில் பார்க்க கூட
முயலாத கண்கள்
காதணியாய் காதொலிகள்
கால்களை கவனிக்க
வெளிநாட்டு காலணிகள்
பேச்சு இல்லை
சிரிப்பு இல்லை
தூக்கம் இல்லை
பார்ப்பவர்கள் எல்லோரும்
உயிரோட்டம் உள்ள இயந்திரமாய்
----------------------------
முட்டாள்கள் தினம்
வருடத்தில் ஒரு நாள் மட்டும்
அனைவரும் அறியும் படி
மற்ற நாட்கள் நமக்குள் 
மட்டுமே பெரும்பாலும்
சிலருக்கு.......
முழு நிலவில் காதல் சொன்ன அன்று
மூன்று முடிச்சு போட்ட அன்று
முகம் முழுதும் ஆர்வத்தோடு
முதல் நாள் கல்லூரி போன அன்று
படிப்பின் இறுதி நாள்
கிடைக்கும் வேலை பற்றி எண்ணும் அன்று
வேலையில் சேர்ந்த பின்னே
சொத்து சேர்க்க தோன்றும் அன்று
பிள்ளை பிறந்தால் சிரிக்கும் அன்று
பெண் பிள்ளை பிறந்தால் முகம் சிறுக்கும் அன்று
இது போல
நாம் மாறும் நாட்கள் சில
(ஏ)மாறும் நாட்கள் பல
ஒரு நாளோடு முடியவில்லை
----------------------
கண்ணுறங்கும் கண்மணியை 
கண்டிருந்தேன் காலையிலே 
அவள் கொண்டுறங்கும் அமைதியினை 
என்றும் கொடுக்க மனம் உறுதி கொண்டேன் 
கோவிலிலே கண்டுணரா இறையினை 
இன்றுணர்ந்தேன்
என் செல்ல மகள் சிரிப்பை மீறி
செல்வம் இல்லை அறிந்து கொண்டேன்
--------------------------
மாற்றிக்கொள்
சூழ்நிலை மாறும் போழ்து
சோர்ந்து வீழாதே
சூரியானாய் மீண்டும் எழு
முயற்சிக்க வாய்ப்பில்லை என்று கூறி
முயற்சிகளை முடக்கிடாதே
முதுகெலும்பே முடங்காமைக்காகதான்
தோல்விகளா !!!
அவை வெற்றிகளின் சாவிகள்
அவமதிப்பா !!!
அவை உன்னை இன்னும் ஆளாக்கும் சாதனங்கள்
தடைகளா !!!
அவை உன் வாழ்வின் இடை நிலைகள்
மாற்றம் என்பதே உன் புது தோற்றம்
மாற்றிக்கொள் அனுதினம்
வாழ்வை போற்றிக்கொள்
அதுவே மிகப் பெரும் வரம் !!!
----------------------------------
ஓரமான இடமும் ஈரமான காற்றும்
தொடர் வண்டியில் ஏறினேன்
தொடர்ந்தது என்னை மக்கள் வெள்ளம்
முன்னும் பின்னும்
முகம் துடைக்க முடியாமல்
மூச்சு விட இயலாமல்
பெட்டியிலே ஏறினேன்
பெரும் சுவாசம் நாடினேன்
வண்டி உருண்ட சில வினாடிகளில்
கிடைத்து ஒரு இருக்கை
முகம் சிரித்தது அது இயற்கை
ஆஹா
இதமான காற்றும்
சற்றே மிதமான வெயிலும்
எனை தீண்டின
எழுத தூண்டின
அதிகாலை துயில் களைவும்
அதை தாண்டி வரும் தொலைவும்
அயராத அயர்ச்சியை தந்தாலும்
இது போல் சுகமான நிகழ்வால்
மனம் சற்று சிரிக்கத்தான் செய்கிறது
-----------------------------------






Sunday, October 26, 2014

டயட்
ஒரு வேளை மட்டுமே உணவருந்தி
உழவோட்டி வாழ்ந்தவனின்
உடலில் என்றும்
கொழுப்பில்லை அமிலமில்லை
உப்பில்லை ரத்த கொதிப்பில்லை
இன்றோ
இவை அனைத்தும் வந்ததால்
ஒரு வேளை சோறு மட்டும் மருந்தாய்
------------------------------------------------------------------------------
சுருங்கி போனது தீபாவளி
கைபேசியில் வெடிகளின் வீடியோக்கள்
தொலைகாட்சியில் சிறப்பு நிகழ்சிகள்
வாட்ஸ்ஆப்பில் வாழ்த்துக்கள் 
கிலோக்களின் வாங்கிய இனிப்புகள் இன்று கிராம் களில்
என
தரை இறங்கி வெடி வெடித்து
அண்டை வீட்டாருக்கு இனிப்பளித்து
அன்போடு பகிர்ந்த வாழ்த்துக்கள் போய்
இன்று நான்கு சுவர்களுக்குள் சுருங்கி போனது
தீபாவளி

------------------------------------------------------------------------------

தந்தைமை
தாய்மை போன்றா தந்தைமை
எதிர் வார்த்தை அல்ல இது நான் கண்ட புது வார்த்தை
தாய்மை தானாய் வருவது 
தந்தை மை நாம் வளர்த்தாலே வருவது
அன்னை அளவிற்கு தந்தையால்
அன்பளிக்க இயலாது தான்
ஆயினும் அன்றாடம் பிள்ளையிடம்
அன்பளிக்க வேண்டும்
அன்னையின் அரவணைப்பில்
பங்களிக்க வேண்டும்
பணி விட்டு வீடு
படி சேரும் போதே
மனம் வெள்ளை தாளாய்
குணம் மாற வேண்டும்
இல்லத்தின் உள்ளே
இன்ப தொழிற்சாலை உண்டு
அதில் எண்ணற்ற இன்பம்
தினம் உருவாகல் நன்று
பிள்ளை விரல் பற்றி
அவள்(ன்) கூட உலா சுற்றி
எல்லையில்லா இன்பம்
கொண்டு வாழ வேண்டும்
கொண்டவளின் தேவை
நமக்கு உண்டான மழலையின் தேவை
உறவுகளின் தேவை
இவை யாவும் முன்னுரிமை கோர்வை
இல்லறத்தில் நல்லறம் காண்
இல்லாளின் நலம் பெண்
ஈன்றவளுக்களிக்காதே ஊன்
தந்தை மை தலைமை
அதில் கொள் பொறுமை
தந்தையாய் கொள்வாய் பெருமை
---------------------------------------------------------------------------
அதிகாலை துயில் எழுந்து 
முக நூலில் உள் நுழைந்து 
உறக்கத்தில் உறைந்திருக்கும் 
மின் நண்பர்கள் தொடர்பைத் தேடி 
அன்றாடம் தொலைந்துவிடும் என் நேரம் 
அருகருகே எனை சுற்றும் புது நட்பை
புதுப்பிக்க ஏனோ தயங்கியது மனம்
----------------------------------------------------------------------------
என் மகள்
வளரும் என் மகளோடு நானும் வளர்கிறேன்
அவள் சிரிப்பில் உள்ள இனிமை பயில்கிறேன்
அவள் உள்ளம் கொண்ட இளமை அறிகிறேன் 
அவள் கிள்ளை மொழிகளில் நான் காதல் கொள்கிறேன்
அவள் போல நானும் தடுமாறி நடக்க முயல்கிறேன்
வீட்டில் அனைவருக்கும் அவள் கொடுக்கும் ஆனந்தம் போல்
நானும் மெது மெதுவாய் அனைவரையும்
மகிழ்விக்க விழைகிறேன்
எனக்கு பிறந்து என்னை பெற்றவள்
நாளை எனையும் தாண்டி வளர கற்றவள்
என் மகள் போல் ஒரு மகள் இவ்வுலகில் இல்லை
------------------------------------------------------------------------------
நண்பன்
நாலும் தெரிந்தவனில்லை
நமை தண்டி அறிந்தவனில்லை
போட்டி அவனிடம் இல்லை 
பொறாமை இல்லவே இல்லை
தோல்வி வரும் நேரம்
நம் தோளோடு தோளாய் நிற்பான்
வெற்றி வரும் நேரம்
நம் கால் இழுத்து தரையில் நிற்க வைப்பான்
குரல் கேட்கத் தேவை இல்லை
விழி பார்க்கத் தேவை இல்லை
நட்பின் உணர்வாலே உன்னை தேடி
ஓடி வருவான்
நண்பன்
நமக்கென்ன ஒரு நாளா நண்பர்தினம்
ஒவ்வொரு நாளுமே நண்பர்கள் தினம் தான் !!!

பதிலாய் என் நண்பன் எழுதியது 


குற்றங் களைவான் - நம்

குறைகள் மறப்பான்
வெற்றிக் களிப்பினிலே - மனம்
வேர்த்து இருக்கையிலே
உற்ற துணைவனவன் - நீர்
ஊற்றித் தணிப்பான்
சற்றுந் தளரான் - உளச்
சோர்வு துடைப்பான்.

சின்னத் தவறுகளை - புன்

சிரிப்பில் உடைப்பான்
என்ன இப்படியா - என
இடித்து உரைப்பான்
முன்னை நினைப்பான் - நமை
முழுதும் நிறைப்பான்
இன்னும் நெடுங்காலம் - உடன்
இருந்து பொறுப்பான்.

--------------------------------------------------------------------------------------




Wednesday, May 28, 2014

தனிமை
சுகம் இல்லாத சுமை
சுவை இல்லாத உணவு 
உடலுள்ளே மெதுவாய் புரையோடும் நோய்
உடைத்தெறிய வேண்டிய உணமையான அடிமை சங்கிலி 
நம் பின் வருவோருக்கு வழிகாட்டக் கூட ஒரே வழி
நமை நாமே நொந்துகொண்டும்
நம்முள் நாமே வெந்துகொண்டும்
இல்லாத ஆயுதத்தால் இதயத்தை இரண்டாகக் கிழித்தெறியும் 

ஒரு வேகம் குறைந்த சோகமான நிலை 
ஒரு தொலைபேசி தொடர்பில்
மூன்று அறிஞர் முப்பது முட்டாள்கள்
அறிஞர்கள் மூடரை அறியவில்லை
மூடர்கள் அறிஞரை அறிவதில்லை
மூச்சுவிட மறந்துவிட்டு முழு நாளும் பேசுகிறர்
முடிவில் என்னாகும்
மூடர் அறிஞர் ஆனரா
அறிஞரெல்லாம் மூடர் ஆனரா
மூடனாய் நானும்

முடிவறிய முயல்கிறேன்
அதிகாலை துயில் எழுந்து
அழகாய் உடை அணிந்து
அமைதியாய் அலுவலகம் போன காலங்கள்
கனவுகளில் மட்டுமே
வேலைப்பளு
குடும்ப சுமை
சுற்றத்தின் சூத்திரங்கள்
சுற்றவைக்கும் சாத்திரங்கள்
அதனால்
நம்மை அறுவடை செய்யும் ஆத்திரங்கள்
கர்மமும் தர்மமும்
நம்மை கவ்வி குதறி
மகிழ்ச்சி நெகிழ்ச்சி
எல்லாம் தூளாய் சிதறி
நாம் உறக்கத்தின் மேல் கூட
இறக்கம் இல்லாத
மன அழுத்தம்

மரண தேவனின் மறு உருவமோ  

தினமும்
எழுந்தது முதல்  வீழ்வது வரை
நொடி தோறும் நம் நாட்கள்
மடிக்கணினியுடன்

பிரியாத தோழியாயும்
சற்றும் பிடிக்காத வியாதியாயும்
இவள் பிடியை
தளர்த்தும்  இரு நாட்கள் நாளை முதல்
என்றென்னும் போது
வாரத்தின் இறுதி நாட்களும்
வாழ்க்கையின் இறுதி நாட்கள் போல்
அரிதாக

சற்றே பெரிதாக தோன்றியது
அதிகாலை எழுந்ததில்
அரைகுறையாய் உறக்கம்
ஒரு பக்கம் தலையின் ஓரம்
சற்றே மெதுவாய்தான் வலிக்கும்
இதில்
நுழைந்தது முதல் 
இருக்கை விட்டு எழுந்தது வரை
இடைவிடா தகவல் பரிமாற்றங்கள்
பங்கு சந்தை போல் உடல் நிலையில் ஏற்ற இறக்கங்கள்
பணி பற்றி பேசும் ந(ண்)பர்கள் பலர்
இதில் என் பிணி பற்றி கேட்க இங்கில்லை சிலர்

தனியாக சற்றே பிணியாக 
இருந்தும்
விரும்பாமல் போனாலும்
இவ்வுலக வியாபாரம் எனை வீழ்த்தியது

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...