அதிகாலை
எழுந்ததில்
அரைகுறையாய்
உறக்கம்
ஒரு
பக்கம் தலையின் ஓரம்
சற்றே
மெதுவாய்தான் வலிக்கும்
இதில்
நுழைந்தது
முதல்
இருக்கை
விட்டு எழுந்தது வரை
இடைவிடா
தகவல் பரிமாற்றங்கள்
பங்கு
சந்தை போல் உடல் நிலையில் ஏற்ற இறக்கங்கள்
பணி
பற்றி பேசும் ந(ண்)பர்கள் பலர்
இதில்
என் பிணி பற்றி கேட்க இங்கில்லை சிலர்
தனியாக சற்றே பிணியாக
இருந்தும்
விரும்பாமல் போனாலும்
இவ்வுலக வியாபாரம் எனை வீழ்த்தியது
இருந்தும்
விரும்பாமல் போனாலும்
இவ்வுலக வியாபாரம் எனை வீழ்த்தியது
No comments:
Post a Comment