நன்றிகளும் நண்பர்களும்
இவை இரண்டும் ஒன்று
இருக்கும் போது இன்பம் கொடுக்கும்
சற்றும் குறைந்தால் உன்னை புரட்டி எடுக்கும்
உணர்ச்சியில் உன்னோடு கலக்கும்
உண்மையாய் உன்னுடன் இருக்கும்
வாழ்வினில் வலிகளின் மருந்தாகும்
தோல்வியில் உன்னை தூக்கி நிறுத்தும்
நீ கொண்ட நன்றிகளும்
நீ கொண்ட நண்பர்களும்
உனை தாங்கி பிடிக்கும்
என்றும் உன்னுள் தேங்கி இருக்கும்
என்னிடம் உள்ளது மனதாரா உங்களுக்கு நன்றிகள்
என்னுடன் உள்ளனர் உமை போன்ற சிறந்த நண்பர்கள்
No comments:
Post a Comment