என்னை பற்றி எழுத எண்ணினேன்......
பித்தனா, சித்தனா, ஜித்தனா இல்லை புத்தனா ?
எவரும் இல்லை நான் ஒரு கனவுப் பறவை. இயற்கையாகவே இயற்கைக்கு புறம்பானவை பற்றி யோசித்து அவற்றையே சுவாசிப்பேன்.
எனை என்றும் ஈர்ப்பது அழகு
குழந்தை அழகு
குமரி அழகு
முதிர்ந்தோர் அழகு
புவி அழகு புல் அழகு என்று அழகாய் தேடுபவன் இல்லை இல்லை அவற்றின் அழகை தேடுபவன்
என் எண்ணத்திற்கு எழுத்து வடிவம் கொடுக்க எண்ணினேன் அதுதான் இந்த கிறுக்கல்கள். ஆம் இவை இன்று முதல் " புரவியின் பயணங்கள்" ......