Wednesday, March 26, 2008

காதலே

முத்தத்தின்
சத்தத்தினை
நித்தமும்
என் சித்தத்தில்

ரீங்காரமாய்
ஆங்காரமாய்
ஓங்காரமாய்

இசைத்து
எனை அசைத்து
உயிரில் பசையாய்
என்றும் நிலைத்து

என் பாவத்தை
கோபத்தை
தாபத்தை

குணமாக்கி
ரணமான என் உள்ளம்
மிதமாக இனி துள்ளும்

விதமாக என் வாழ்வை
வளம் ஆக்க வந்த
நீ
உருவத்தை மறுத்து விடும்
உலகுஆளும் கடவுளை போல்
என்னுள் வர மறுக்கிறாய்
என்னை உன்னுள் கரைக்க முயல்கிறாய்

குருடனின் வெளிச்சம்

திசை இலா பட்டம் போல
இசை இலா குழல்கள் போல
பசி இலா வயிறு போல
ருசி இலா கனிகள் போல

நோக்கில்லா வாழ்வை வாழ்ந்து என்
போக்கினை மறந்து விட்டேன்

விழிகளை இழந்த பின்னே
விடியலை வேண்டி நின்று

முடிவிலா பாதை தன்னில்
என் பயணத்தைத் தொடருகின்றேன்

குருடனின் வாழ்வின்
கும்மிருட்டு வெளிச்சம் போல்
வெளிச்சத்தை தேடி விழியின்றி அலைகின்றேன்

எனது சென்ற வருட நட்பு

ஒரு வருடம்
பல மாதம் முன்
ஓரிரவு நேரம்
புகை வண்டி நிலையம்
அவள் வந்தாள்
வழி கேட்டாள்
வழி சொன்னதன் பதிலாக
நட்பை தந்தாள்
திரும்பி பார்த்தால்
ஓடியது ஒரு வருடம்
வாழ்க்கையின் வேகம் தான் எத்துனை
அவளிடம் கேட்டேன்
இது நட்பா இல்லை
அதையும் தாண்டியாத என்று
கட்டாயமாக மறுத்தாள்
சற்றே கடிந்து கொண்டாள்

அப்பொழுதுதான்
உணர்ந்தேன்இது நட்பின் உயர்ந்த நிலை என்று

பூரிக்கிறேன் என் நட்பை கண்டு
புன்னகைகிறேன் என் நண்பியை கண்டு
அனைத்தையும் சொல்வாள்
அன்பினால் கொள்வாள்

எனக்குள் இருந்த என்னை
எனக்கே உணர்த்திய
என் அன்பு நண்பியே

காலம் நம்மை பிரிக்கலாம்
வேலையால் விட்டு விலகலாம்
நமக்குள் இருக்கும் இந்த நட்பு
கலக்கும் காற்றுடன் இந்த உலகெல்லாம்

Tuesday, March 4, 2008

கவலை

பசிக்கவில்லை
தூக்கம் வரவில்லை
தனிமை இனிமையானது
இரவு நீண்டது
பகல் முடிய மறுத்தது
உலகம் சுழியாய் தோன்றியது
மேகம் நகரவில்லை
மரங்கள் அசையவில்லை
நண்பர்கள் காதல் என்றார்கள்
அப்பாவிகள்
இது கவலை என்று கூட
கண்டறிய இயலாதவர்கள்

விட்டு செல்கிறேன்

இடமான குளிர்
இன்பமான இரவு நேரம்
மிதமான வெயில்
மெல்லிய இளங்காற்று
சாலையின் இரு மருங்கிலும்
அழகு மரங்கள்
விண்வெளியை நினைவூட்டும்
இரு சக்கர ஊர்திகள்
வனத்தில் பறக்க என்னும்
னர் சக்கர ஊர்திகள்
வீட்டுக்குள் எட்டி பார்க்கும்
ரோட்டின் புழுதிக l
பாதை முழுவதும்
பட்டாம் பூச்சிகள்
வீதி இரு மருங்கிலும்
வெள்ளை தேவதைகள்
விட்டு செல்கிறேன்
பூங்கா நகரத்தை

உலகம்

ஒரு வார்த்தை
ஒரு பார்வை
ஒரு நொடி
ஒரு மூச்சு
ஒரு காதல்
ஒரு சிரிப்பு
ஒரு ஊடல்
அவளுடன்
இதுதான் என் உலகம்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...