முதியோர் இல்லம்
உயிர் கொடுத்த உன்னதர்கள்
உயிரோடு புதைக்கப்படும் இடம்
உணவு கிடைத்தாலும்
உயிர் இருந்தாலும்
தன் உதிரத்தின் உறவில்லாது
ஊமையான மனத்தோடு
ஈன்ற வயிற்றில் கணத்தோடு
தோலில் சுருக்கங்களோடும்
மனத்தில் இறுக்கங்களோடும்
எஞ்சி நிற்கும்
காலத்தினை
வெறும் கஞ்சிக்காக
கழித்திடும்
பிஞ்சு மனம் கொண்ட பெரியவர்களின்
மறைவிடம்
நமக்கு மெருகு ஏற்ற
தம்மை மெழுகாய் உருக்கியவர்கள்
இறுதி நாட்களிலும் எறிந்து கரியாகும் அடுப்பு
No comments:
Post a Comment