Wednesday, May 28, 2014

காதணி விழா 

அன்பு மகள் என் மடியில்
அவள் அன்னையவள் என் அருகில்
எம் இருவர் எண்ணமெல்லாம்
எம் குழந்தை இன்னல் எண்ணி
ஆசாரி அருகில் வந்து
அன்பாய் அவள் காதை  தீண்டி
செல்லாமாய் சிரிக்க வைக்க
சில சில செய்கைகள் செய்கின்றார் 

என் மகளோ அவரை கண்டு
அடங்காத அச்சம் கொண்டு
அழுதிடத்தான் ஆரம்பித்தாள்
என்னுள் தனை நுழைத்து ஒளிந்து கொண்டாள்

கதறினாள் என் பெண்ணவள் 
அருகே பதறினாள் என்னவள்
எனக்குள்ளும்  உதறல்தான் இருப்பினும்
எண்ணம் சிதறாமல் நிறுத்தி நின்றேன் 
முடிவிலே தோல்வியுற்றாள் என் பெண்
காதிலே அணியை சேர்த்தார் அவள் கண் முன்

அழுததில் அயர்ந்து போனாள்
கண்கள் அயர்ச்சியில் உறங்கிப்  போனாள்
துவன்டதில் தூங்கும்  என் மழலையை உற்றுப் பார்த்தேன்
ஆதவன் காதல் கொள்ளும்
வெண்மதி வெட்கம் கொள்ளும்
விண்மீன்கள் சூழ்ந்து கொள்ளும்
சிறு ஒளி சிதறலாய் அவள் முகம்
அவள் அழகிற்கு அணி சேர்ப்பது போல்

அழகாய் சிறியதாய் காதணிகள்

No comments:

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...