இயலாத இதயமும்
இருண்டுள்ள விழிகளும்
சோகமுமாய் கோபமுமாய்
அலைந்திருக்கும் தேகமும்
சூழ்நிலை அறியா சுயநலமும்
வெறுமையும்
வெறுப்பும்
ஒவ்வாமையும்
இங்ஙனம்
உயரதுடிக்காத
ஒன்றுக்கும் உதவாத
ஒரு நோக்கு கொண்டவனின்
விரல் இடுக்கு எழுத்தாணி
எங்கனம் எழுதும்
Thursday, October 20, 2011
நடுவில் நான்
அளவில்லா அன்பு
அடைப்பில்லா பாசம்
என்னை அணைத்திருக்கும் காதல்
இவை நடுவில் நான்
குளிர் நடுக்கும் குழந்தையாய்
குரல் அடைத்த குயிலாய்
இறகொடிந்த மயிலாய்
அழுகவும் முடியாமல்
உரக்க உளறவும் இயலாமல்
உள்ளுக்குள் உணருகிறேன் என் வலி
அது என் உறுதியாய் குலைகின்ற உளி
இல்லைகள்
அழகில்லை
அறிவில்லை
பணமில்லை
பதவியில்லை
புகழில்லை
இவ் "இல்லைகள்" அல்ல வாழ்வின் "எல்லைகள்"
நம்பிக்கை
நன்னடத்தை
இன்முகம்
இடி தாங்கும் இதயம்
இவை கொள் அவை துரத்தும் உன் தாழ்வின் "தொல்லைகள்"
Monday, April 11, 2011
உறக்கம்
மெத்தையில் தத்தையாய் தவழ்ந்து சித்தம் அது தளர்ந்து சத்தம் குறைந்து பித்தமாய் இரு கண் மூடியும் வரவில்லை வந்தது என் வேலையின் இடைவேளையில் வழக்கத்தின் மாறாய் இவ்வுறக்கம்
Subscribe to:
Posts (Atom)
ஆடாய் கனைக்கும் சிங்கம்
பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால் பல் முளைத்து விடுமாஇல்லை பல்ப மிட்டாய் கசந்திடுமா மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...
-
உறவுகள் பிரிவதற்கே உயிர் அது போவதற்கே கலாம் அது கழிவதற்கே காதல் அது murivatharke மனம் அது மறப்பதற்கே பணம் அது ஒவ்வொரு நன்மைக்...
-
வேகாத வெயிலிலே வெள்ளை போட்டுக்கிட்டு ஒரு கைல சொத்து மூட்டை ஒரு தோளுல வேலைக்கான சாட்டை (அதான் மடிக்கணினி) எப்ப பாரு கைபேசியிலே தொன தொனனு...