Wednesday, November 28, 2012

விபா

என் அழகு தேவதையின்
மீதிருந்து தெறித்த இச் சிறிய மின்மினி
விண்ணைத் தொட எத்தனிக்கும் கை விரல்கள்
இம்மண்ணை துளைக்க முயலும் கால் நகங்கள்
என் கையில் அவள் நீந்தும் நேரம்
உள்ள சுமை எல்லாம் ஓடும் வெகு தூரம்
ஒரு துளி சிரிப்பை அவள் உதிர்க்கையில்
ஒவ்வொரு துகளும் அவளை சுற்றும் உவகையில்
பெண்ணாய் பிறந்து
மண்ணாய் இருந்த இவன் பிறப்பை
பொன்னாய் மாற்றியவள்

Thursday, October 4, 2012

அன்னை என் மனைவி

என் அன்பு மனைவி அன்னை ஆனாள்
அடி வயிற்றில் பிள்ளை ஆடும்
ஆனந்த நடனத்தால்
அலுப்படைந்தாலும்
அழகாக ரசிக்கிறாள்
என்னவளின் பெண்ணழகை
இமைக்காமல் நான் ரசிக்க
என்னவளோ கிள்ளையதன்
இடைவிடாத இயக்கத்தில்
தன்னை மறந்து லயிக்கிறாள்

Thursday, March 29, 2012

அடியல்ல இது என்னுள் வெடி

நிலை மாறி நின்ற நான் 
என் நிழல் மாற உணரவில்லை 
அதற்காய் விலை தந்தேன் 
என் விருப்பங்கள் 
 சிலை வந்ததென் வாழ்வில் 
பின் உலை வைத்ததேன் என் கலையில் 
உணர முயல்கையில் 
உண்மை உறைக்கிறது 
விருப்பங்கள் வீண் இல்லை 
திருப்பங்கள் தான் வாழ்வின் எல்லை 
 மாறும் நிலையும் மலரும் கலையும் 
 உண்மை ஏற்றுகொள் 
உன்னை தேற்றிக்கொள்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...