என்
நிழல் மாற உணரவில்லை
அதற்காய் விலை தந்தேன்
என் விருப்பங்கள்
சிலை வந்ததென் வாழ்வில்
பின்
உலை வைத்ததேன் என் கலையில்
உணர முயல்கையில்
உண்மை உறைக்கிறது
விருப்பங்கள் வீண் இல்லை
திருப்பங்கள் தான் வாழ்வின் எல்லை
மாறும் நிலையும்
மலரும் கலையும்
உண்மை
ஏற்றுகொள்
உன்னை தேற்றிக்கொள்