Wednesday, April 10, 2013

என்னபோல உன்னைபோல

வேகாத வெயிலிலே வெள்ளை போட்டுக்கிட்டு
ஒரு கைல சொத்து மூட்டை
ஒரு தோளுல வேலைக்கான சாட்டை (அதான் மடிக்கணினி)
எப்ப பாரு கைபேசியிலே
தொன தொனனு ஒரே பேச்சு
நடுநடுவில் வெளிவருது பாவம் ஒரு பேரு மூச்சு
யாருக்காக வேலை செய்யற தாண்டவகோனே
இப்படி வேலை செஞ்சி என்னத்த கண்ட தாண்டவகோனே
புடிச்ச வேலை கெடைச்சதில்லை அது போவட்டும்
அட புடிச்சதையும் செய்றதில்லை எந்த மகமாரும்
சந்தோஷமா வாழப் பாரு அளவு இல்லாம
சங்கடங்கள் ஓடிப்போகும் உன் முன்னாடி நில்லாம
சட்டை கொலாய மாட்டிப்புட்டா சரியாய் போச்சுதா
இல்ல சாமியாரா போயிட்டாதான் சங்கடம் தீந்துதா
சாமி
சத்தியமா இருந்து பாரு சாந்தம் வந்தாடும்
சாமி கூட முன்னாடி வந்து சடுகுடு ஆடும்



மீண்டும் என் மகளுக்காக

உறங்கும் என் மகளை
உடன் அமர்ந்து
உற்று நோக்குகிறேன்
கனவில்லா அவள் உறக்கம்
அதில் கண் மூடா ஒரு கிறக்கம்
அன்பே நீ வளர்ந்தால்
உன் உறக்கமே கனவாகும்
உன் கனவில் தான் உறக்கம் வரும்
என் கனவே நீ என்றிருப்பேனா
இல்லை உன்னை கனவு காண வைப்பேனா
அறியேன் கண்ணே
என் ஐம்பொன் பெண்ணே

Monday, March 4, 2013

என் மகளின் முதல் ஒலிகள்

என் மகளின் முதல் ஒலிகள்

கேட்டதில் மயங்கின பச்சை கிளிகள்
கிள்ளை மொழி பேசியதில் இப் பிள்ளை
என் சொல்லை சூறையாடியது

சூதறியா சகுனி அவள்
பகடை இல்லா விரல்களினால்
எம்மை பரமபதம் ஆட்டுவிப்பாள்
ஏணி ஏறாமல்
பாம்பில் இறங்கவே மனம் விரும்பும்
அவள் விளையாட்டில் இறுதிவரை இருக்க வேண்டி
இயங்காத கருவிகளும் இசை எழுப்பும் இவள் குரலில்
மயங்காத மனதுகளும் மயங்கிவிடும் இவள் சிரிப்பில்

மண்ணுலகில் வந்துதித்த என் விண்ணுலக தேவதையே
உனை என் கண்களுக்குள் வைத்திருப்பேன்
என் கண்மணியாய் பார்த்திருப்பேன்




ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...