Saturday, April 11, 2015

மக்கள்
ஈரமில்லா சட்டை
சோர்வு இல்லா முகம்
வியர்வை ஆகா விரல்கள் 
நிற்க நினைக்கா கால்கள்
பறக்க துடிக்கும் கைகள்
பக்கத்தில் பார்க்க கூட
முயலாத கண்கள்
காதணியாய் காதொலிகள்
கால்களை கவனிக்க
வெளிநாட்டு காலணிகள்
பேச்சு இல்லை
சிரிப்பு இல்லை
தூக்கம் இல்லை
பார்ப்பவர்கள் எல்லோரும்
உயிரோட்டம் உள்ள இயந்திரமாய்
----------------------------
முட்டாள்கள் தினம்
வருடத்தில் ஒரு நாள் மட்டும்
அனைவரும் அறியும் படி
மற்ற நாட்கள் நமக்குள் 
மட்டுமே பெரும்பாலும்
சிலருக்கு.......
முழு நிலவில் காதல் சொன்ன அன்று
மூன்று முடிச்சு போட்ட அன்று
முகம் முழுதும் ஆர்வத்தோடு
முதல் நாள் கல்லூரி போன அன்று
படிப்பின் இறுதி நாள்
கிடைக்கும் வேலை பற்றி எண்ணும் அன்று
வேலையில் சேர்ந்த பின்னே
சொத்து சேர்க்க தோன்றும் அன்று
பிள்ளை பிறந்தால் சிரிக்கும் அன்று
பெண் பிள்ளை பிறந்தால் முகம் சிறுக்கும் அன்று
இது போல
நாம் மாறும் நாட்கள் சில
(ஏ)மாறும் நாட்கள் பல
ஒரு நாளோடு முடியவில்லை
----------------------
கண்ணுறங்கும் கண்மணியை 
கண்டிருந்தேன் காலையிலே 
அவள் கொண்டுறங்கும் அமைதியினை 
என்றும் கொடுக்க மனம் உறுதி கொண்டேன் 
கோவிலிலே கண்டுணரா இறையினை 
இன்றுணர்ந்தேன்
என் செல்ல மகள் சிரிப்பை மீறி
செல்வம் இல்லை அறிந்து கொண்டேன்
--------------------------
மாற்றிக்கொள்
சூழ்நிலை மாறும் போழ்து
சோர்ந்து வீழாதே
சூரியானாய் மீண்டும் எழு
முயற்சிக்க வாய்ப்பில்லை என்று கூறி
முயற்சிகளை முடக்கிடாதே
முதுகெலும்பே முடங்காமைக்காகதான்
தோல்விகளா !!!
அவை வெற்றிகளின் சாவிகள்
அவமதிப்பா !!!
அவை உன்னை இன்னும் ஆளாக்கும் சாதனங்கள்
தடைகளா !!!
அவை உன் வாழ்வின் இடை நிலைகள்
மாற்றம் என்பதே உன் புது தோற்றம்
மாற்றிக்கொள் அனுதினம்
வாழ்வை போற்றிக்கொள்
அதுவே மிகப் பெரும் வரம் !!!
----------------------------------
ஓரமான இடமும் ஈரமான காற்றும்
தொடர் வண்டியில் ஏறினேன்
தொடர்ந்தது என்னை மக்கள் வெள்ளம்
முன்னும் பின்னும்
முகம் துடைக்க முடியாமல்
மூச்சு விட இயலாமல்
பெட்டியிலே ஏறினேன்
பெரும் சுவாசம் நாடினேன்
வண்டி உருண்ட சில வினாடிகளில்
கிடைத்து ஒரு இருக்கை
முகம் சிரித்தது அது இயற்கை
ஆஹா
இதமான காற்றும்
சற்றே மிதமான வெயிலும்
எனை தீண்டின
எழுத தூண்டின
அதிகாலை துயில் களைவும்
அதை தாண்டி வரும் தொலைவும்
அயராத அயர்ச்சியை தந்தாலும்
இது போல் சுகமான நிகழ்வால்
மனம் சற்று சிரிக்கத்தான் செய்கிறது
-----------------------------------






ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...