வெள்ளை திரையில்
வண்ணப் படம்
விரல்களில் விததைகள்
விழிகளில் தீப்பொறி
கண்ணசைவில் காதல்
கைப்பிடித்தால் கல்யாணம்
கனவினில் காதல் பாடல்
கடைசியில் காணும் சுபம்
நிஜத்தில்நடக்காததெல்லாம்
நிழல் படத்தில்
இரண்டு மணி நேரத்தில்
இனியதொரு வாழ்வை
இன்ப துன்பம் கலந்து
20 ரூபாய் செலவில் காட்டும்
கனவு தொழிற்சாலை
சினிமா
No comments:
Post a Comment