அதிகாலை
அன்பு மனைவிக்கு முன் எழுந்து
ஓடோடி பால் வாங்கி வீடு வந்து
செல்லப் பிள்ளைகளை எழச் செய்து
அவரோடு மன்றாடி பள்ளிக்கு தயார் செய்து
மனைவி தரும் உணவதை குழந்தைகளை அருந்த வைத்து
இரு சக்கர வாகனத்தின் இரு புறமும் அவர்களை அமர்த்தி
வழியெல்லாம் அவரோடு கதை பேசி
பள்ளி கொண்டு விட்ட பின்பு
அவர்தம் தலை வாரி முகம் துடைத்து
ஒரு முறைக்கு பல முறை அவர் நோக்கிக் கை அசைத்து
முன்பை விட வேகமாக வீடு வந்து
கை கிடைத்த உணவதனை அவசரமாய் ருசித்து விட்டு
கை கடிகாரத்தை பார்த்து கொண்டாய்
அலுவலகம் நோக்கி போகும்
பொறுப்பு மிகு தந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்
No comments:
Post a Comment