புது வீடு நோக்கி நடந்து வந்தேன் முதல் நாளில்
அத்தெருவின் மூதாதையர்
மேதகு நாய்கள்வரவேற்றன வழக்கம் போல்
இரு நாய்கள் தள்ளி நின்று சிறு நாய்கள் என்னை சுற்றி நின்று
ஓயாமல் குரைத்தன
எனைஓட வைக்கத்தான் நினைத்தன
இதயத்தை கையில் இறுக்கமாய் கொண்டு
அடி மீது அடி வைத்து நடந்து போனேன் புதுப் பெண் போல்
மறுநாள் அதே வேளை
மனதுக்குள் பய உதறல்
துர்கையையும் காளியையும் துணைக்கு அழைத்துக்கொண்டே
மெதுவாக நுழைந்தேன் வீதியில்
அதே நாய்கள்நின்றன
அவற்றின் விழிகள் உருண்டன எனக்கோ
கண்கள் மருண்டன
ஆச்சர்யம்!!!
சத்தமில்லை சலனமில்லை
சிறு பிள்ளையாய் எனை பார்த்துஆட்டின தம் வாலை
நான் கிள்ளி பார்த்தேன் என் தோளை
உணர்ந்தேன்
அவைகொள்ளும் அடையாளம் ஒருமுறையில்
ஆயின் அதை உணரும் பாங்கில்லை நம் நடைமுறையில்
No comments:
Post a Comment