Wednesday, April 10, 2013

என்னபோல உன்னைபோல

வேகாத வெயிலிலே வெள்ளை போட்டுக்கிட்டு
ஒரு கைல சொத்து மூட்டை
ஒரு தோளுல வேலைக்கான சாட்டை (அதான் மடிக்கணினி)
எப்ப பாரு கைபேசியிலே
தொன தொனனு ஒரே பேச்சு
நடுநடுவில் வெளிவருது பாவம் ஒரு பேரு மூச்சு
யாருக்காக வேலை செய்யற தாண்டவகோனே
இப்படி வேலை செஞ்சி என்னத்த கண்ட தாண்டவகோனே
புடிச்ச வேலை கெடைச்சதில்லை அது போவட்டும்
அட புடிச்சதையும் செய்றதில்லை எந்த மகமாரும்
சந்தோஷமா வாழப் பாரு அளவு இல்லாம
சங்கடங்கள் ஓடிப்போகும் உன் முன்னாடி நில்லாம
சட்டை கொலாய மாட்டிப்புட்டா சரியாய் போச்சுதா
இல்ல சாமியாரா போயிட்டாதான் சங்கடம் தீந்துதா
சாமி
சத்தியமா இருந்து பாரு சாந்தம் வந்தாடும்
சாமி கூட முன்னாடி வந்து சடுகுடு ஆடும்



மீண்டும் என் மகளுக்காக

உறங்கும் என் மகளை
உடன் அமர்ந்து
உற்று நோக்குகிறேன்
கனவில்லா அவள் உறக்கம்
அதில் கண் மூடா ஒரு கிறக்கம்
அன்பே நீ வளர்ந்தால்
உன் உறக்கமே கனவாகும்
உன் கனவில் தான் உறக்கம் வரும்
என் கனவே நீ என்றிருப்பேனா
இல்லை உன்னை கனவு காண வைப்பேனா
அறியேன் கண்ணே
என் ஐம்பொன் பெண்ணே

Monday, March 4, 2013

என் மகளின் முதல் ஒலிகள்

என் மகளின் முதல் ஒலிகள்

கேட்டதில் மயங்கின பச்சை கிளிகள்
கிள்ளை மொழி பேசியதில் இப் பிள்ளை
என் சொல்லை சூறையாடியது

சூதறியா சகுனி அவள்
பகடை இல்லா விரல்களினால்
எம்மை பரமபதம் ஆட்டுவிப்பாள்
ஏணி ஏறாமல்
பாம்பில் இறங்கவே மனம் விரும்பும்
அவள் விளையாட்டில் இறுதிவரை இருக்க வேண்டி
இயங்காத கருவிகளும் இசை எழுப்பும் இவள் குரலில்
மயங்காத மனதுகளும் மயங்கிவிடும் இவள் சிரிப்பில்

மண்ணுலகில் வந்துதித்த என் விண்ணுலக தேவதையே
உனை என் கண்களுக்குள் வைத்திருப்பேன்
என் கண்மணியாய் பார்த்திருப்பேன்




Wednesday, November 28, 2012

விபா

என் அழகு தேவதையின்
மீதிருந்து தெறித்த இச் சிறிய மின்மினி
விண்ணைத் தொட எத்தனிக்கும் கை விரல்கள்
இம்மண்ணை துளைக்க முயலும் கால் நகங்கள்
என் கையில் அவள் நீந்தும் நேரம்
உள்ள சுமை எல்லாம் ஓடும் வெகு தூரம்
ஒரு துளி சிரிப்பை அவள் உதிர்க்கையில்
ஒவ்வொரு துகளும் அவளை சுற்றும் உவகையில்
பெண்ணாய் பிறந்து
மண்ணாய் இருந்த இவன் பிறப்பை
பொன்னாய் மாற்றியவள்

Thursday, October 4, 2012

அன்னை என் மனைவி

என் அன்பு மனைவி அன்னை ஆனாள்
அடி வயிற்றில் பிள்ளை ஆடும்
ஆனந்த நடனத்தால்
அலுப்படைந்தாலும்
அழகாக ரசிக்கிறாள்
என்னவளின் பெண்ணழகை
இமைக்காமல் நான் ரசிக்க
என்னவளோ கிள்ளையதன்
இடைவிடாத இயக்கத்தில்
தன்னை மறந்து லயிக்கிறாள்

Thursday, March 29, 2012

அடியல்ல இது என்னுள் வெடி

நிலை மாறி நின்ற நான் 
என் நிழல் மாற உணரவில்லை 
அதற்காய் விலை தந்தேன் 
என் விருப்பங்கள் 
 சிலை வந்ததென் வாழ்வில் 
பின் உலை வைத்ததேன் என் கலையில் 
உணர முயல்கையில் 
உண்மை உறைக்கிறது 
விருப்பங்கள் வீண் இல்லை 
திருப்பங்கள் தான் வாழ்வின் எல்லை 
 மாறும் நிலையும் மலரும் கலையும் 
 உண்மை ஏற்றுகொள் 
உன்னை தேற்றிக்கொள்

Thursday, October 20, 2011

என்ன எழுத ?

இயலாத இதயமும்
இருண்டுள்ள விழிகளும்
சோகமுமாய் கோபமுமாய்
அலைந்திருக்கும் தேகமும்
சூழ்நிலை அறியா சுயநலமும்
வெறுமையும்
வெறுப்பும்
ஒவ்வாமையும்
இங்ஙனம்
உயரதுடிக்காத
ஒன்றுக்கும் உதவாத
ஒரு நோக்கு கொண்டவனின்
விரல் இடுக்கு எழுத்தாணி
எங்கனம் எழுதும்

நடுவில் நான்

அளவில்லா அன்பு
அடைப்பில்லா பாசம்
என்னை அணைத்திருக்கும் காதல்
இவை நடுவில் நான்
குளிர் நடுக்கும் குழந்தையாய்
குரல் அடைத்த குயிலாய்
இறகொடிந்த மயிலாய்
அழுகவும் முடியாமல்
உரக்க உளறவும் இயலாமல்
உள்ளுக்குள் உணருகிறேன் என் வலி
அது என் உறுதியாய் குலைகின்ற உளி

இல்லைகள்

அழகில்லை
அறிவில்லை
பணமில்லை
பதவியில்லை
புகழில்லை
இவ் "இல்லைகள்" அல்ல வாழ்வின் "எல்லைகள்"
நம்பிக்கை
நன்னடத்தை
இன்முகம்
இடி தாங்கும் இதயம்
இவை கொள் அவை துரத்தும் உன் தாழ்வின் "தொல்லைகள்"

Monday, April 11, 2011

உறக்கம்

மெத்தையில் தத்தையாய் தவழ்ந்து சித்தம் அது தளர்ந்து சத்தம் குறைந்து பித்தமாய் இரு கண் மூடியும் வரவில்லை வந்தது என் வேலையின் இடைவேளையில் வழக்கத்தின் மாறாய் இவ்வுறக்கம்

Wednesday, December 22, 2010

தூறல் நின்றது

நேற்றுவரை நில்லாமல் என்னை
நனைத்து வந்த தூறல் நின்றது
ஆம் அவள் என் விரல் நீங்கி சென்றதால்
உன்னால் துளிர்த்திருந்த என் இதயம்
துவண்டது
நீர் இன்றி வரண்டது
உன் தூறல் ஒலி
கேட்டு உயிர்த்திருத்த செவி
இன்றோ மலர் வலயத்தால் மறைக்கப்பட்டு விட்டது
உன் மழை தந்த ஈரம் பட
நடந்திருந்த பாதங்கள்
நின்றது முழுவதுமாய்
முற்றிலுமாய்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...