Wednesday, December 22, 2010

தூறல் நின்றது

நேற்றுவரை நில்லாமல் என்னை
நனைத்து வந்த தூறல் நின்றது
ஆம் அவள் என் விரல் நீங்கி சென்றதால்
உன்னால் துளிர்த்திருந்த என் இதயம்
துவண்டது
நீர் இன்றி வரண்டது
உன் தூறல் ஒலி
கேட்டு உயிர்த்திருத்த செவி
இன்றோ மலர் வலயத்தால் மறைக்கப்பட்டு விட்டது
உன் மழை தந்த ஈரம் பட
நடந்திருந்த பாதங்கள்
நின்றது முழுவதுமாய்
முற்றிலுமாய்

Sunday, December 5, 2010

கண்ணழகி

காலைப் பேருந்தில் கண்டேன்அவளை
கோடிக் கண்கள் நடுவில்
இஜ் ஜோடிக் கண்கள்
வலை வீசி பிடித்தன என்னை
கண நேரம் எனை மறந்தேன்
எனை அறியாமல் நான் பறந்தேன்
அவள் விழிகள் பேசிய மொழிகளை
இமை மூடாமல் படித்து நின்றேன்
இருக்கை இல்லையென்றால் இயல்பாய் சாடும் மனம்
இன்று இன்பத்தில் திளைத்தது அவள் அருகில் நின்றதால்
அவள் வேல் விழிகள் என்னைக் கொள்ளாதோ
அவள் விழி வில்கள் அம்புகளை தொடுக்காதோ
இன்னும் ஒரு முறை
இப்போரில் மாட்டி
இன்னுயிரை துயிர்க்க
ஏங்குகிறேன் நான்

Thursday, December 2, 2010

இன்பம்

இதழோர சிரிப்பும்
இமையோர கண்ணீர் துளிர்ப்பும்
இரண்டரக்கலந்ததில்லை
உன் இரு விழி என்னில்
இரண்டறக் கலந்த கணம்
என் விழிகளில் துளிர்த்தன துளிகள்
என் முகத்திலோ புன்சிரி ஒளிகள்
இதுதான் இன்பமோ
இன்று கண்டுணர்ந்தேன்

Wednesday, December 1, 2010

என் தெரு நாய்கள்

புது வீடு நோக்கி நடந்து வந்தேன் முதல் நாளில்
அத்தெருவின் மூதாதையர்
மேதகு நாய்கள்வரவேற்றன வழக்கம் போல்
இரு நாய்கள் தள்ளி நின்று சிறு நாய்கள் என்னை சுற்றி நின்று
ஓயாமல் குரைத்தன
எனைஓட வைக்கத்தான் நினைத்தன
இதயத்தை கையில் இறுக்கமாய் கொண்டு
அடி மீது அடி வைத்து நடந்து போனேன் புதுப் பெண் போல்
மறுநாள் அதே வேளை
மனதுக்குள் பய உதறல்
துர்கையையும் காளியையும் துணைக்கு அழைத்துக்கொண்டே
மெதுவாக நுழைந்தேன் வீதியில்
அதே நாய்கள்நின்றன
அவற்றின் விழிகள் உருண்டன எனக்கோ
கண்கள் மருண்டன
ஆச்சர்யம்!!!
சத்தமில்லை சலனமில்லை
சிறு பிள்ளையாய் எனை பார்த்துஆட்டின தம் வாலை
நான் கிள்ளி பார்த்தேன் என் தோளை
உணர்ந்தேன்
அவைகொள்ளும் அடையாளம் ஒருமுறையில்
ஆயின் அதை உணரும் பாங்கில்லை நம் நடைமுறையில்

Monday, November 29, 2010

என் கிராமத்து காதலி

கண்டாங்கி சேலை கட்டி
கஞ்சி கலயம் சுமந்துகிட்டு
மஞ்சள் பூசின முகத்துலதான்
சென்னேரத்துல சாந்து போட்டு
மல்லிகைய வச்சிருப்பா
வாயில் வெத்தலைய போட்டுருப்பா
வெத்தலையில் சிவந்திருக்கும்
குமரி அவ உதடு ரெண்டும்
யப்பா பாத்ததுமே பறந்து போகும்
என் ஒடம்பு கொண்ட களைப்பு எல்லாம்

சந்தோசம்

மூணு வேலை சோறு போட்டு
வருஷம் ரெண்டு துணி குடுத்து
காடு மேடு பள்ளமெல்லாம் சரி செய்ய சொல்லி புட்டு
காஞ்சி குடிச்சி சுத்துகிற விவசாயி சந்தோசம்
கைநெறைய காசு வாங்கி
கால் மேல காலு போட்டு
சட்டையோட கழுத்து பட்டை
கொஞ்சம் கூட கசங்காம
வேத்து மொழி பேசிக்கிட்டு
புள்ளைக கூட ஆட்டம் போட்டு
வேலைன்ற பேருல எதையோ செஞ்சு போகும்
கவலை பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லாத
இந்த கம்ப்யூட்டர் பசங்களுக்கு என்னைக்காவது
கெடைச்சிருக்குமோ ?

தந்தை

அதிகாலை
அன்பு மனைவிக்கு முன் எழுந்து
ஓடோடி பால் வாங்கி வீடு வந்து
செல்லப் பிள்ளைகளை எழச் செய்து
அவரோடு மன்றாடி பள்ளிக்கு தயார் செய்து
மனைவி தரும் உணவதை குழந்தைகளை அருந்த வைத்து
இரு சக்கர வாகனத்தின் இரு புறமும் அவர்களை அமர்த்தி
வழியெல்லாம் அவரோடு கதை பேசி
பள்ளி கொண்டு விட்ட பின்பு
அவர்தம் தலை வாரி முகம் துடைத்து
ஒரு முறைக்கு பல முறை அவர் நோக்கிக் கை அசைத்து
முன்பை விட வேகமாக வீடு வந்து
கை கிடைத்த உணவதனை அவசரமாய் ருசித்து விட்டு
கை கடிகாரத்தை பார்த்து கொண்டாய்
அலுவலகம் நோக்கி போகும்
பொறுப்பு மிகு தந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்

அவள் பிரிவால்.......

இருண்டது என் இதயம்
இயங்க முரண்டது அது நிதமும்
அவள் நினைவில் துடித்திருந்தது
அவள் பெயரால் உயிர்த்திருந்தது
என் விரல்களை விடு அவள் நீகும் நேரம்
என் கண்ணோரம் துளிர்த்தது
ஒரு ஈரம்

**********************************************

உன் கூர் மூக்கும்
குறு குறு பார்வையும் அழகாய்
குவிந்த இதழ்களும்
கார் மேகம் ஒத்த கூந்தலும்
எனதில்லை என்று எண்ணும் நேரம்
இனம் புரியா இதய வலி கண்ணே
நீ வந்து சென்ற இதயம்
பாலைவனமாய் வரண்டது
தடம் தெரியா வழி சென்ற நீ
இன்னும் வசிக்கிறாய் என் விழிகளில்

Saturday, October 23, 2010

வலிக்கத்தான் வலிகள்

புத்திக்கு தெரிவதெல்லாம்
நம் மனதிற்கு புரிவதில்லை
சரியே
ஆம்
இழந்தாலும் விடுவதில்லை
முடிந்தாலும் நிறுத்தவில்லை
நினைவுகளால் வதைப்பதும்
இறந்த நிஜங்களை மீண்டும் விதைப்பதும்
சுகமான வலி என்று கவிஞர் கூறினும்
வலிக்கிறதே வாழ்வே சலிக்கிறதே

Friday, August 27, 2010

pen தோழி

என் இனிய pen தோழியே
என் தோழியாய் பின் நின்று
என் வார்த்தையின் வளமை கண்டு
என் மீது உரிமை கொண்டு
என் எழுத்தை செதுக்கி
என் ஆற்றல் பெருக்கி
எனை ஆக்கினாய்
எழுத்தாளனாய்
என் தோழியாய் நீ இருப்பதினும்
என் pen தோழியாய் இருப்பதில்
இறுமாப்பு கொள்கிறேன்
:)

பாவம் முதிர் கன்னிகள்

காதலித்து பார்த்தேன்
காதலில் தோல்வியுற்றும் பார்த்தேன்
களங்கமிலா உள்ளம்
என் மேல் காதல் கொண்டும் பார்த்தேன்
இன்று
கல்யாண சந்தையில் கால் கடுக்க நிறுத்த பட்டேன்
பல் பிடித்து பார்க்கும் சிலபேர்
என் purse பிடித்து பார்க்கும் பலபேர்
நோகா நெஞ்சில் நயவஞ்சகமாய்
வஞ்சகமாய் உல் செலுத்தும் வெகு பேர்
என் சொல்வேன் இச்சந்தை
எனை விற்க என்ன யுக்தி செயகுமோ
பாவம் முதிர் கன்னிகள்

Thursday, August 26, 2010

என்

அன்றோ..
வலித்தது பசித்தது
தவித்தது துடித்தது
இனித்தது கசந்தது
இயற்கையில் என் மனம் லயித்தது
உள்ளத்தின் ஓசைகளை என் உள்ளங்கை அறிந்தது
நெஞ்சத்தின் ஆசைகளை என் நகக்கண்ணும் உணர்ந்தது
இன்றோ.
வழியுமில்லை வலியும்மில்லை
செவி கேட்கும் ஒலிகள் என் செவியோடு மறைந்தது
கவி பாட தூண்டும் எண்ணம் என்னுள் கல்லறை கட்டி புகுந்தது
மாற்றமா இது ஒரு இடை நிலை தோற்றமா
தோணவில்லை

Wednesday, August 25, 2010

குடை மீது கோபம்


துளிகளை அணிகலாக்கி
கார்மேகத்தை உடையாய் கொண்டு
கவர்ச்சியாய் நடனம் ஆடும்
அக் கார்குழல் மழை அழகியின்
உருவத்தை மறைக்கும் இந்த
குடை மீது எனக்கு கோபம்

எழுத சொன்ன இதயத்திற்காய்

இறந்து போன இதயத்தில்
இரு சொட்டு எண்ணெய் விட்டு
இரு மடங்காய் ஒளி கொடுத்தாள்
என் மனம்
மறந்து போன வார்த்தைகளை தன்
அன்பால் கறந்து சேர்த்து கவிதை ஆக்கியவள்
எழுத சொன்னால் என்னை
இயங்கியவற்றை எழுதிய நான்
இன்று இயங்க மறுக்கும் என் இதயத்தை பற்றி எழுத முயல்கிறேன்

Sunday, June 20, 2010

தமிழ் பெண்ணின் அழகு

வகுடெடுத்து வரியா வளப்பான கருங்கூந்தல் அதில்
வண்ணமில்லா வெள்ளை மலர்கள் வீற்றிருந்தது அழகாக
படிவாய் படர்ந்த அந்த பச்சை வண்ண மேலாடை
படபடக்கும் பட்டாம் பூச்சி இமைகள்
இனிக்கின்ற இதழும்
கேள்வி குறி போன்ற செவியும்
அட
வள்ளுவனாய் பிறப்பிருந்தால் இவளை இருவரியில் வடித்திருப்பேன்
பாரதியை இருந்திருந்தால் அழகு தமிழ் இசையாய் இசைத்திருபேன்

உறக்கத்திற்கு இல்லாமல் போன இரக்கம்

உறக்கதிருக்கு இல்லாமல் போனது என் மேல் இரக்கம்
ஏன் இந்த அரக்க குணம் ?
பிறக்கத்தான் தெரிந்தது வழி
பிறக்கும் தான் புரிந்தது
வருத்தமா இல்லை வாழ்வில்
திருத்தமா தெரியவில்லை
நினைத்து பார்த்தேன்
கிறக்கம் தன வருகிறது

Saturday, June 19, 2010

இன்பம்

தனியே நின்றிருந்தேன்
புல் வெளியின் விளிம்பு
நதிக்கரை துவக்கம்
பாதம் புல்லின் மேல்
விரலோரம் நதி நீர் ஈரம்
இமை உயர உயர்ந்தது
விழி வியப்பில் விரிந்தது
இயற்கையின் இன்பம் எத்துனை
புல் தரும் பாதத்தில் சுகம்
நதி கொடுக்கும் இதம் நுனி நரம்பில் ஒரு ரகம்
அந்நொடி
உணர்ந்தேன்
இன்பத்தின் உச்சம்

inbam

தனியே நின்றிருந்தேன்
புல் வெளியின் விளிம்பு
நதிக்கரை துவக்கம்
பாதம் புல்லின் மேல்
விரலோரம் நதி நீர் ஈரம்
இமை உயர உயர்ந்தது
விழி வியப்பில் விரிந்தது
இயற்கையின் இன்பம் எத்துனை
புல் தரும் பாதத்தில் சுகம்
நாடி கொடுக்கும் இதம் நுனி நரம்பில் ஒரு ரகம்
அந்நொடி
உணர்ந்தேன்
இன்பத்தின் உச்சம்

Thursday, May 6, 2010

ஊசி முனை
உன் வார்த்தை
உரசியது உரிமையாய்
காற்றுப்பை
என் உள்ளம்
வெடித்ததடிவெறுமையாய்

Wednesday, May 5, 2010

இன்று நான்

இன்று நான்
கல்லடி பட்ட கண்ணாடி
நூல் அறுந்த காத்தாடி
வால் இழந்த பல்லி
வாடிவிழுந்த மல்லிகை
மழை மறைத்த வானவில்
சிறகொடிந்த பறவை
ஆட மறந்த மயில்
பாட மறந்த குயில்
இத்துனை குறிப்புகள்
என்னை குறிக்கும் வண்ணம்
குருகிப்போனேன்
எண்ணங்கள் கருகிப்போனேன்
காகிதத்தில் தீட்டினேன்
கார் வண்ண ஓவியம்
காகிதமே கிழிந்தது
என் ஓவியமும் மறைந்தது
சொல்லத் தெரியவில்லை என் வலி
சொல்லத் தேடுகிறேன் ஒரு வழி
ஆறாத ரணம் அல்ல இந்நிலை
என் கடலினில் ஓயாது அடித்திடும் ஒரு அலை

Tuesday, May 4, 2010

அது இது எது

இரவு இருளவில்லை

விடியலில் வெளிச்சமில்லை

நினைவு நகர வில்லை

என் நிகழ்வோ எதுவுமில்லை

காரணம் அது

வேலையில் நாட்டமில்லை

காலையில் விழிப்பு இல்லை

சோகமாய் கண்ணின் ஓரம்

ஈரமாய் கண்ணீரின் முல்லை

காரணம் இது

இனிப்புகள் இனிக்கவில்லை

என் இரவுகள் முடிவதில்லை

வாழ்வினில் நாட்டம் இல்லை

நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை

காரணம் அது

இவனது நினைவுகளுக்கும்

இவ்வகை நிகழ்வுகளுக்கும்

இதுவா அதுவா

எதுதான் கரணம்

இது அது எது எல்லாமே

என்ன

காதலா

தோல்வியா

கவலையா

பிரிவா

இழப்பா

உணரத்தான் முடிகிறது

உரைக்க முடியவில்லை


Thursday, April 22, 2010

அது

காலை எழும் நேரம்
கண் விழிக்க மறுக்கிறது
முன்பெல்லாம் மதியவேளை
அடி வயிற்றில் ஓடிய அந்த
வைரமுத்துவின் வார்த்தை உருண்டை
இன்று இதயத்தில் உருளுகிறது
இரவு வேளை இதமாய் என்னை
வருடும் பொது
இமைகள் அதுவாய் இணையும் தாருங்கள்
இன்றெல்லாம் வெறுப்பாகிறது
என் தூக்கம் ஒரு அருவருப்பகிறது
குளிக்கும் போது நான்கு கைகளை
மனம் நினைக்கிறது
நடக்கும் பொது பாத்து விரல்களை
விழிகள் ஏங்குகிறது
ஒருமையாய் இருந்த உள்ளம்
இன்று பன்மையை மாறியதன்
உண்மையான காரணம்
அதுவா ?
தெரியவில்லை ஆனால்
உள்ளம் மகிழ்கிறது
இத் தவிப்பில் நெகிழ்கிறது

Tuesday, April 13, 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கனவுகள் கை கோர்கட்டும்
கவலைகள் நசிந்து ஓடட்டும்
நினைவுகள் இனிமை ஆகட்டும்
நிஜத்தினில் மகிழ்ச்சி பொங்கட்டும்
நேற்றோடு போனது நம் துன்பமெல்லாம்
காற்றோடு போனது நம் தோல்வி எல்லாம்
சுவாசிப்போம் சந்தோசம் இன்று முதல்
சந்திப்போம் வெற்றியை இவ்வாண்டு முதல்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, April 12, 2010

இறைவன் ?

காகிதத்தில்
எழுதிப் பார்த்தேன் கடவுளை
கல்லிலும் செதுக்கிப் பார்த்தேன்
கடவுளை

நிஜத்தில் நினைத்து பார்த்தேன் கடவுளை
நிஜமாய் வெறுத்து போனேன் கடவுளை
கண் கொடுத்து
ஒளி கொடுத்து
விழிக்குள் உயிர் கொடுத்து
இரு கை கொடுத்து
கால் கொடுத்து
குணம் கொடுத்து
மனம் கொடுத்து
எனை படைத்த இறைவன்
மனம் தன்னில் நிதம் என்னை வதம்
செய்து கொல்கிறான்

குழந்தை நண்பன்

வளர்ந்தவன் தான்

எங்களுள் கலந்தவன் தான்
வந்தான் எங்களுக்குள் ஒருவனாய்

வளர்ந்தான் அன்று முதல் தனி ஒருவனாய்

இருந்தவரை அவன் நிழல் கூட தனியாய் நடந்ததில்லை

இறுதிவரை அவன் நிழல் எங்களை தாண்டி சென்றதில்லை

எங்களுள் இருந்த பொறுமையை சோதித்தவன்

எங்களுள் இருந்த பொறாமையை கொன்று சாதித்தவன்

நண்பனை வந்தவன்

எங்கள் செல்ல குழந்தையாய் மாறினான்

வளர்ந்தவன் தான்

எங்களால் வளர்ந்தவன் தான்

நகர்ந்தவன் தான் இன்று எங்களை விடு நகர்ந்தவன் தான்





Tuesday, March 30, 2010

அவள்

அவள் அழகு என்னை அடிக்கவில்லை
அவள் பண்பு என்னை படுத்தவில்லை
அவள் பெண்மைக்கு நான் அடிமை இல்லை
ஆனாலும்
இன்று தோன்றுகிறது அவள் இல்லையெனில்
நான் இல்லை
என்ன சொல்வேன் என் நிலை
உறக்கம் வருகிறது
அவள் தானே என் உறக்கத்தின் உள் நோக்கம்
பசி படுத்துகிறது
அவள் நினைவுதானே என் உணவு
வெள்ளை காகிதம் எழுத்துகள் அழகாகிறது
அக் கவிதைகளின் நாயகி அவள் தானே
என் மொழி இனிமையாய் ஒலிக்கிறது
என் பேச்சின் மூலமே அவள் தானே
நிற்கையில்
நடக்கையில்
இருக்கையில்
என்றும் என் இரு கையின் ஈரம்
குறையாமல் பற்றும்
அவள் கரம்
வேண்டும் என்றும்
வேண்டுகிறேன் என்றும்

Sunday, March 14, 2010

மானசி - என் உடன் பிறவா பிறப்பின் பிறக்காத குழந்தை

மானசி
மனதினால் மானுவாகி போனவள்
பிஞ்சு விரல்கள்
கொஞ்சும் விழிகள்
தத்தையாய் தவழ்ந்து
என் நித்திரை பரிப்பவள்

வெள்ளித்திரை அறியாதவள்
சின்னத்திரை பற்றி புரியாதவள்
கணினியை காழ்போடு பார்க்கும்
சின்ன குயில் அவள்
விரல்களால் கிறுக்குவாள்
வியத்தகு ஓவியங்களை
தன்விழிகளால் பேசுவாள்
நயம் மிகு கவிதைகளை
காண்பவர்கள் கண் சிமிட்டாமல்
கண்மணி அவள் புகழ் பாடுவர்
என் கண்ணே மானு
பிறந்தால் நீ என் குழந்தையாய் மட்டும் இரு
உன் குதுகலம் கண்டால் போதும் கண்ணே

என் உள்ளம் உயிர் ரெண்டும் உன் பின்னே ஓடும்

Tuesday, March 2, 2010

அவன்

கண் முன் இல்லை
ஆனால் மனம் முழுவதும்
கால் கடுக்க என்னோடு நடக்கவில்லை
ஆனால்ஒவ்வொரு அடியிலும் அவனும்
அருகே அமர்ந்து உணவருந்தவில்லை
ஆனால் ஒவ்வொரு கவலதிலும் அவன்
அவன் மூச்சின் கற்று என் மேல் படவில்லை
ஆனால் நான் சுவாசிக்கும் மூச்சினிலும் அவன்
என் செய்வேன்
அவனாய் நான் மாறினேனோ
அவன்தான் என்னை மாற்றினானோ
சொல்லத் தெரியவில்லை
ஆனால் சுகமாய் இருக்குது இவ் வலி

Thursday, February 18, 2010

என்ன இது மாற்றம்

முன்பு
எண்ணங்கள் என்னிடமே இருந்தன
வார்த்தைகள் என் பேச்சை கேட்டன
நினைவுகள் நான் சொன்ன வழி நடந்தன
இதயம் இதமாய் துடித்தது
தெரியவில்லை
இன்று
எண்ணங்கள் என்னிடம் இல்லை
பேச்சு என் சொல்பேச்சு கேட்பதில்லை
நினைவுகள் உன்னைத்தான் சுற்றுகின்றன
இதயம் துடிப்பதில்லை பதிலாக
உன் பெயரை படிக்கிறது நொடிப்பொழுதும்
இந்த மற்றம் ஏழு நாள் முன்னே
என் செய்வேன்
எங்கனம் மீள்வேன்
வேதனை தான் ஆனால்
இவ்வலி ரணமாய் என்னை வாட்டவில்லை
பூவின் மனமாய் வீசுகிறது
என் உடல் உறுதியை குலைக்கவில்லை
மனதின் ஆற்றலை கூட்டுகிறது
பெண்ணே
உன்னே பெண்ணே என்று கூப்பிட உல் நாக்கு
முயல்கிறது
உதடு அன்பே என்ற வார்த்தை விட்டு வெளியே
வர மறுக்கிறது
என்ன மாற்றம் செய்தாய்
நீ என்று என்னுள் குடியேற்றம் செய்தாய்
வலிக்குதடி என் மனம்
நீ வேண்டும் என்று துடிக்குதடி என் உயிர்
வா கண்ணே
என் வாழ்வில் வா பெண்ணே


Monday, February 15, 2010

குறும்பு செய்த குழந்தை முகம்
அன்னையின் செல்ல கோபத்தின் முன்
குளிர் கால இரவில் காதலியின் முகம்
காதலனின் கதகதப்பு கிடைக்கும் முன்
எதிர்பாரா நிகழ்வு நடந்த ஏழையின் முகம்
தன்கடவுள் எதிரே நிற்கும் முன்
வெற்றியை இழந்த ஒரு வீரனின் முகம்
தன் எதிரியின் முன்தோற்றும் துணிவுடன் நிற்கும் முன்
எழுதிக்கொண்டே செல்லலாம்
இக் கண்களும்
கன்னங்களும்
கார் கூந்தலும்
கூர் மூக்கும்
குவிக்கும் உணர்வின் பிம்பங்களை

Tuesday, February 9, 2010

ஆரம்பம் ஆவதெல்லாம் முடிவை அடைவதில்லை
அன்பினால் பினைந்ததெல்லம் காதலாய் ஆவதில்லை
உண்மையை கண்டு கொண்டேன் அதை
உலகிற்கு அடித்து சொல்வேன்
பெண்ணிவள் புதுமை பென்னம் ஆனால்
மண் மணம் மறக்கவில்லை
பேசி பார் இவளிடம் நீயும் இனிய
பாடலின் சத்தம் கேட்கும்
பாடலை கேட்கத் தூண்டும் இவள்
குரல் அது குயிலை மிஞ்சும்
ஆண்டவன் படைப்பினிலே
அனைவரும் ஜொலிப்பதில்லை
ஆனால்
இவளது படைப்பினாலே அந்த
ஆண்டவன் ஜொலிக்கின்றானே

Monday, February 8, 2010

நான்

குழந்தையாய் பிறந்தேன்
மாணவனாய் வளர்ந்தேன்
இளைஞன்ஆய் உயர்ந்தேன்
ஊழியனாய் திரிந்தேன்
தலைவனாய் கணவனாய் தந்தையாய்
உருமாறி திளைத்திருந்தேன்
ஒரு முறையேனும்
மனிதனாய்
மாற இல்லை வாழ
விழைகிறேன்
விழிகளில் எதிர்பார்ப்புடன்


Thursday, February 4, 2010

காபி

கருப்பு வெள்ளை காதலரின்
கலப்பால் பிறந்த
பழுப்பு நிற குழந்தை
குடித்தால் ஓடும்
சோம்பல் தூரம்
முகர்ந்தால் போதும்
முகமெல்லாம் வெளிச்ச ரேகை ஓடும்
ஒரு கையில் காபி ஏந்தி
உயர்ந்து நீ வானை பார்த்தல்
உலகமே உன் கீழ் என்று ஒரு
இருமப்பே உனக்குள் ஓடும்
காபி
இரு வேறு இதயங்கள் ஒன்றாக
கலக்கும் இடத்தில இருக்கும் ஒரே
ஊடகம்
தூண்டு கோள்

Sunday, January 31, 2010

எழுத்து

எழுதிய எழுத்துகள் வலியை போக்கும்
எழுதாத எழுத்துகள் வலிமையை தாக்கும்
எழுதிப்பார் உன் வலியை
அது உன் குருதியின் சூட்டை தணிக்கும்
வடித்து பார் உன் காதலை
அது உன் மன ஊட்ட வேகத்தை ரெட்டிப்பாக்கும்
எழுதும் எழுத்தில் அல்ல அதன் ஆற்றல்
அது பதியும் வடுவினில் தான்
எழுத்து வெறும் காகித கிறுக்கல் அல்ல
அது வலிகளின் வழி
பேச மொழிகளின் துளி
எழுதிப்பார்



Saturday, January 30, 2010

குழந்தையாய் இருந்திருந்தால்

குழந்தையாய் இருந்திருந்தால்
குட்டையை பார்த்தால்
குதித்து விளையாடி இருக்கலாம்
குறிபார்த்து பக்கத்துக்கு வீட்டு
கண்ணாடி ஜன்னலை உடைத்து இருக்கலாம்
உருகி ஓடும் ஐஸ் குச்சியை
நுனி நாக்கால் நான்றாக உறிஞ்சி சுவைத்திருக்கலாம்
அடித்தாலும் அம்மா நம்மை அன்பாக அரவணைப்பால்
தடுத்தாலும் தந்தை நம்மோடு ஆசையாய் விளையாடி இருப்பார்
ஆசை தாத அன்பு பாட்டி
அளவிலா முத்ததை அமுதாய் பொழிந்து இருப்பர்
வரப்போவதில்லை அக்கணங்கள் திரும்பி
வலித்தாலும் ஏற்க வேண்டும் இந்நிலையை நாம் விரும்பி

நண்பா உனக்காக

நடக்கத் தெரியாத குழந்தைக்கு
நடை பயிற்றும் தந்தையை
படிக்கப் பழகும் பிள்ளையை
பயிற்று விக்கும் ஆசானாய்
வெற்றி பெறத் துடிக்கும்
வீரனின் தளபதியாய்
உறவாய்
நட்பாய்
நேசமாய்
பாசமாய்
என்னையும் ஒருவனாய்
இறையாண்மைக்கு உரியவனை
உருவாக ஊக்குவித்த
நீ வளம் பல பெற்று
நலமோடு வாழ
உளமார இறைவனை
உருகி நான் வேண்டுகிறேன்

Friday, January 29, 2010

மலரே.....

எனக்கு முன் மலர்ந்தாயோ
ஏன் மலர்ந்தென்னை மறைத்தாயோ
மறைத்ததில் நான் வருத்தவில்லை
நீ மலர்ந்ததிலும் எனக்கு மகிழ்ச்சி இல்லை
மலரே
என் மலரே
நீ மலர்ந்தென்னை மறப்பாயோ என்று
என்னும் நொடி மட்டும் உன் இதழ்
தாங்கும் முட்கள் என் இதயத்தை
துளைக்கிறதே

Thursday, January 28, 2010

கண்மணி

ஏந்தினேன் என் கண்மணியை
கையில் எதோ இலவம் பஞ்சு படர்ந்த ஒரு சுகம்
மகத்தில் ரோஜாபூ இதழ் பட்ட ஒரு சுகம்
அமமல்லிகை முகம் என் மனதில் ஒரு புரியாத சிலிர்ப்பை தந்தது
எட்டி உதிக்கும் என் கண்மணியின் பட்டு பதங்கள்
வழியை தரவில்லை பதிலாக என் மொழியை பறித்தன
பேச துடித்தேன் பேச்சு வரவில்லை
துளிகளால் நிறைந்த என் கண்கள்
வருந்துகிறேன் நான் என் வளர்ந்துவிட்டேன் என்று

இவை

பழகத் தேவை நொடிகள்
பிரியத் தேவை சில அடிகள்
இணையத் தேவை சில வழிகள்
இணைக்கும் நம்மை நம் விழிகள்

யதார்த்தம்

உண்மையில் உண்மையாய் இருப்பின்
உரிமைகள் உண்மையாய் இருக்கும்
உண்மையின் மை தீர்ந்து போனால்
உரிமைகள் ஊமை ஆகி தேயும்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...