Wednesday, March 4, 2009

உன் இழப்பு

உன் இழப்பு
என் இறப்பு
என் செய்வேன் என் தோழி
இறைவன் கொடுக்கவில்லை
இருவர் இணையும் வாரம்
இனியும் கிடைக்க போவதில்லை
உன் போல் ஒரு குணம்
இன்று முதல் இது என் நெஞ்சில்
என்றும் ஆறா ஒரு ரணம்
ஈடு செய்ய எண்ணுவாதை விட
இறந்த காலமாக்க எண்ணுகிறேன்
முடியவில்லை
நிழலாய் நீ வந்திருந்தால்
என் நினவுகளில் நின்றிருக்கமாட்டாய்
நிஜமாய் வந்தவளே
உன் நெஞ்சினில் என்னைத் தைத்தவளே
எங்ஙனம் உனை மறப்பேன்
உனை மறந்தால் எங்ஙனம் இவ்வுலகில் இருப்பேன்
வளமொடு வாழ்க நீ
என்றும் என் மனதில் அணையாத தீ
- இவன்

Thursday, February 19, 2009

திருமணம்

பொருளாதாரத்தின் விளம்பரமாய்
இன்று திருமணம்
இரு மனங்கள் ஒருமிக்க
இயற்கை அதன் துணை நிற்க
பெரியவர் சிறியவார் வாழ்த்து பாட
பெண்ணவளின் கை பிடிக்கும் பேரின்ப
நிகழ்வதை இன்று
அழைப்பு இல்லாமல்
ஆடம்பரஆடைகளில்
பொன் நகை குறைந்து
புன்னகை அழிந்து
உறவுகள் இல்லாமல்
உணவருந்த கையேந்தும் அவலத்தோடு

பெரியவர்கள் பாதம் தொட்டு
ஆசி பெற்ற காலம் விட்டு
கை குலுக்கும் கட்டி அணைக்கும்
கலாசாரததினால் கட்டுண்டு
திருமணத்தின் உண்மை தன்னை
மனத்துக்குள் புதைத்து விட்டு
வெறுமையாய் இருவர் சேரும்
ஒரு இயல்பான நிகழ்வாய் இன்று திருமணம்

Thursday, February 12, 2009

சினிமா

வெள்ளை திரையில்
வண்ணப் படம்

விரல்களில் விததைகள்
விழிகளில் தீப்பொறி
கண்ணசைவில் காதல்
கைப்பிடித்தால் கல்யாணம்
கனவினில் காதல் பாடல்
கடைசியில் காணும் சுபம்
நிஜத்தில்நடக்காததெல்லாம்
நிழல் படத்தில்

இரண்டு மணி நேரத்தில்
இனியதொரு வாழ்வை
இன்ப துன்பம் கலந்து

20 ரூபாய் செலவில் காட்டும்
கனவு தொழிற்சாலை
சினிமா

மன்னிப்பு

கண்களில் ஈரத்தொடு
நெஞ்சினில் பாரத்தொடு
அவளிடம் சொன்னேன்
என்னை மன்னிப்பாய
அவள் ஈரத்தின் மேல்
அனலை மூடி
அதில் என் அன்பை வாடி
உயிரோடுஇட்டாள் சிதையில்

எரியவில்லை என் மனம்
என்னிடம் தான் இல்லையே என் மனம்
அவள் நெஞ்சம் எரியும் என்று
எரியும் தீயிலும் கண்ணீர் சிந்தினேன்

சாதி

சாத்திரத்தில் சொல்லவில்லை கோத்திரம் பார்க்க வேண்டுமென்று
சூத்திரர்கள் பிராமணர்கள் என்றும் ஒரு பிரிவும் இருக்கவில்லை
படைத்தவையும் பிரித்து வைத்து படைப்புகளுள் வெறுப்பை வைத்து
மணங்களெல்லாம் ரனங்களாக்கும் அவனமான சின்னமாய்
சாதி
கிளப்பும் பீதியை அடியோடு அழிக்க வேண்டும் இல்லயெல் மீதம் இருக்கும் மனிதரும் வாதம் செய்தே வாழ்வழிந்து போவார்

Wednesday, March 26, 2008

காதலே

முத்தத்தின்
சத்தத்தினை
நித்தமும்
என் சித்தத்தில்

ரீங்காரமாய்
ஆங்காரமாய்
ஓங்காரமாய்

இசைத்து
எனை அசைத்து
உயிரில் பசையாய்
என்றும் நிலைத்து

என் பாவத்தை
கோபத்தை
தாபத்தை

குணமாக்கி
ரணமான என் உள்ளம்
மிதமாக இனி துள்ளும்

விதமாக என் வாழ்வை
வளம் ஆக்க வந்த
நீ
உருவத்தை மறுத்து விடும்
உலகுஆளும் கடவுளை போல்
என்னுள் வர மறுக்கிறாய்
என்னை உன்னுள் கரைக்க முயல்கிறாய்

குருடனின் வெளிச்சம்

திசை இலா பட்டம் போல
இசை இலா குழல்கள் போல
பசி இலா வயிறு போல
ருசி இலா கனிகள் போல

நோக்கில்லா வாழ்வை வாழ்ந்து என்
போக்கினை மறந்து விட்டேன்

விழிகளை இழந்த பின்னே
விடியலை வேண்டி நின்று

முடிவிலா பாதை தன்னில்
என் பயணத்தைத் தொடருகின்றேன்

குருடனின் வாழ்வின்
கும்மிருட்டு வெளிச்சம் போல்
வெளிச்சத்தை தேடி விழியின்றி அலைகின்றேன்

எனது சென்ற வருட நட்பு

ஒரு வருடம்
பல மாதம் முன்
ஓரிரவு நேரம்
புகை வண்டி நிலையம்
அவள் வந்தாள்
வழி கேட்டாள்
வழி சொன்னதன் பதிலாக
நட்பை தந்தாள்
திரும்பி பார்த்தால்
ஓடியது ஒரு வருடம்
வாழ்க்கையின் வேகம் தான் எத்துனை
அவளிடம் கேட்டேன்
இது நட்பா இல்லை
அதையும் தாண்டியாத என்று
கட்டாயமாக மறுத்தாள்
சற்றே கடிந்து கொண்டாள்

அப்பொழுதுதான்
உணர்ந்தேன்இது நட்பின் உயர்ந்த நிலை என்று

பூரிக்கிறேன் என் நட்பை கண்டு
புன்னகைகிறேன் என் நண்பியை கண்டு
அனைத்தையும் சொல்வாள்
அன்பினால் கொள்வாள்

எனக்குள் இருந்த என்னை
எனக்கே உணர்த்திய
என் அன்பு நண்பியே

காலம் நம்மை பிரிக்கலாம்
வேலையால் விட்டு விலகலாம்
நமக்குள் இருக்கும் இந்த நட்பு
கலக்கும் காற்றுடன் இந்த உலகெல்லாம்

Tuesday, March 4, 2008

கவலை

பசிக்கவில்லை
தூக்கம் வரவில்லை
தனிமை இனிமையானது
இரவு நீண்டது
பகல் முடிய மறுத்தது
உலகம் சுழியாய் தோன்றியது
மேகம் நகரவில்லை
மரங்கள் அசையவில்லை
நண்பர்கள் காதல் என்றார்கள்
அப்பாவிகள்
இது கவலை என்று கூட
கண்டறிய இயலாதவர்கள்

விட்டு செல்கிறேன்

இடமான குளிர்
இன்பமான இரவு நேரம்
மிதமான வெயில்
மெல்லிய இளங்காற்று
சாலையின் இரு மருங்கிலும்
அழகு மரங்கள்
விண்வெளியை நினைவூட்டும்
இரு சக்கர ஊர்திகள்
வனத்தில் பறக்க என்னும்
னர் சக்கர ஊர்திகள்
வீட்டுக்குள் எட்டி பார்க்கும்
ரோட்டின் புழுதிக l
பாதை முழுவதும்
பட்டாம் பூச்சிகள்
வீதி இரு மருங்கிலும்
வெள்ளை தேவதைகள்
விட்டு செல்கிறேன்
பூங்கா நகரத்தை

உலகம்

ஒரு வார்த்தை
ஒரு பார்வை
ஒரு நொடி
ஒரு மூச்சு
ஒரு காதல்
ஒரு சிரிப்பு
ஒரு ஊடல்
அவளுடன்
இதுதான் என் உலகம்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...