Monday, April 11, 2011

உறக்கம்

மெத்தையில் தத்தையாய் தவழ்ந்து சித்தம் அது தளர்ந்து சத்தம் குறைந்து பித்தமாய் இரு கண் மூடியும் வரவில்லை வந்தது என் வேலையின் இடைவேளையில் வழக்கத்தின் மாறாய் இவ்வுறக்கம்

Wednesday, December 22, 2010

தூறல் நின்றது

நேற்றுவரை நில்லாமல் என்னை
நனைத்து வந்த தூறல் நின்றது
ஆம் அவள் என் விரல் நீங்கி சென்றதால்
உன்னால் துளிர்த்திருந்த என் இதயம்
துவண்டது
நீர் இன்றி வரண்டது
உன் தூறல் ஒலி
கேட்டு உயிர்த்திருத்த செவி
இன்றோ மலர் வலயத்தால் மறைக்கப்பட்டு விட்டது
உன் மழை தந்த ஈரம் பட
நடந்திருந்த பாதங்கள்
நின்றது முழுவதுமாய்
முற்றிலுமாய்

Sunday, December 5, 2010

கண்ணழகி

காலைப் பேருந்தில் கண்டேன்அவளை
கோடிக் கண்கள் நடுவில்
இஜ் ஜோடிக் கண்கள்
வலை வீசி பிடித்தன என்னை
கண நேரம் எனை மறந்தேன்
எனை அறியாமல் நான் பறந்தேன்
அவள் விழிகள் பேசிய மொழிகளை
இமை மூடாமல் படித்து நின்றேன்
இருக்கை இல்லையென்றால் இயல்பாய் சாடும் மனம்
இன்று இன்பத்தில் திளைத்தது அவள் அருகில் நின்றதால்
அவள் வேல் விழிகள் என்னைக் கொள்ளாதோ
அவள் விழி வில்கள் அம்புகளை தொடுக்காதோ
இன்னும் ஒரு முறை
இப்போரில் மாட்டி
இன்னுயிரை துயிர்க்க
ஏங்குகிறேன் நான்

Thursday, December 2, 2010

இன்பம்

இதழோர சிரிப்பும்
இமையோர கண்ணீர் துளிர்ப்பும்
இரண்டரக்கலந்ததில்லை
உன் இரு விழி என்னில்
இரண்டறக் கலந்த கணம்
என் விழிகளில் துளிர்த்தன துளிகள்
என் முகத்திலோ புன்சிரி ஒளிகள்
இதுதான் இன்பமோ
இன்று கண்டுணர்ந்தேன்

Wednesday, December 1, 2010

என் தெரு நாய்கள்

புது வீடு நோக்கி நடந்து வந்தேன் முதல் நாளில்
அத்தெருவின் மூதாதையர்
மேதகு நாய்கள்வரவேற்றன வழக்கம் போல்
இரு நாய்கள் தள்ளி நின்று சிறு நாய்கள் என்னை சுற்றி நின்று
ஓயாமல் குரைத்தன
எனைஓட வைக்கத்தான் நினைத்தன
இதயத்தை கையில் இறுக்கமாய் கொண்டு
அடி மீது அடி வைத்து நடந்து போனேன் புதுப் பெண் போல்
மறுநாள் அதே வேளை
மனதுக்குள் பய உதறல்
துர்கையையும் காளியையும் துணைக்கு அழைத்துக்கொண்டே
மெதுவாக நுழைந்தேன் வீதியில்
அதே நாய்கள்நின்றன
அவற்றின் விழிகள் உருண்டன எனக்கோ
கண்கள் மருண்டன
ஆச்சர்யம்!!!
சத்தமில்லை சலனமில்லை
சிறு பிள்ளையாய் எனை பார்த்துஆட்டின தம் வாலை
நான் கிள்ளி பார்த்தேன் என் தோளை
உணர்ந்தேன்
அவைகொள்ளும் அடையாளம் ஒருமுறையில்
ஆயின் அதை உணரும் பாங்கில்லை நம் நடைமுறையில்

Monday, November 29, 2010

என் கிராமத்து காதலி

கண்டாங்கி சேலை கட்டி
கஞ்சி கலயம் சுமந்துகிட்டு
மஞ்சள் பூசின முகத்துலதான்
சென்னேரத்துல சாந்து போட்டு
மல்லிகைய வச்சிருப்பா
வாயில் வெத்தலைய போட்டுருப்பா
வெத்தலையில் சிவந்திருக்கும்
குமரி அவ உதடு ரெண்டும்
யப்பா பாத்ததுமே பறந்து போகும்
என் ஒடம்பு கொண்ட களைப்பு எல்லாம்

சந்தோசம்

மூணு வேலை சோறு போட்டு
வருஷம் ரெண்டு துணி குடுத்து
காடு மேடு பள்ளமெல்லாம் சரி செய்ய சொல்லி புட்டு
காஞ்சி குடிச்சி சுத்துகிற விவசாயி சந்தோசம்
கைநெறைய காசு வாங்கி
கால் மேல காலு போட்டு
சட்டையோட கழுத்து பட்டை
கொஞ்சம் கூட கசங்காம
வேத்து மொழி பேசிக்கிட்டு
புள்ளைக கூட ஆட்டம் போட்டு
வேலைன்ற பேருல எதையோ செஞ்சு போகும்
கவலை பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லாத
இந்த கம்ப்யூட்டர் பசங்களுக்கு என்னைக்காவது
கெடைச்சிருக்குமோ ?

தந்தை

அதிகாலை
அன்பு மனைவிக்கு முன் எழுந்து
ஓடோடி பால் வாங்கி வீடு வந்து
செல்லப் பிள்ளைகளை எழச் செய்து
அவரோடு மன்றாடி பள்ளிக்கு தயார் செய்து
மனைவி தரும் உணவதை குழந்தைகளை அருந்த வைத்து
இரு சக்கர வாகனத்தின் இரு புறமும் அவர்களை அமர்த்தி
வழியெல்லாம் அவரோடு கதை பேசி
பள்ளி கொண்டு விட்ட பின்பு
அவர்தம் தலை வாரி முகம் துடைத்து
ஒரு முறைக்கு பல முறை அவர் நோக்கிக் கை அசைத்து
முன்பை விட வேகமாக வீடு வந்து
கை கிடைத்த உணவதனை அவசரமாய் ருசித்து விட்டு
கை கடிகாரத்தை பார்த்து கொண்டாய்
அலுவலகம் நோக்கி போகும்
பொறுப்பு மிகு தந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்

அவள் பிரிவால்.......

இருண்டது என் இதயம்
இயங்க முரண்டது அது நிதமும்
அவள் நினைவில் துடித்திருந்தது
அவள் பெயரால் உயிர்த்திருந்தது
என் விரல்களை விடு அவள் நீகும் நேரம்
என் கண்ணோரம் துளிர்த்தது
ஒரு ஈரம்

**********************************************

உன் கூர் மூக்கும்
குறு குறு பார்வையும் அழகாய்
குவிந்த இதழ்களும்
கார் மேகம் ஒத்த கூந்தலும்
எனதில்லை என்று எண்ணும் நேரம்
இனம் புரியா இதய வலி கண்ணே
நீ வந்து சென்ற இதயம்
பாலைவனமாய் வரண்டது
தடம் தெரியா வழி சென்ற நீ
இன்னும் வசிக்கிறாய் என் விழிகளில்

Saturday, October 23, 2010

வலிக்கத்தான் வலிகள்

புத்திக்கு தெரிவதெல்லாம்
நம் மனதிற்கு புரிவதில்லை
சரியே
ஆம்
இழந்தாலும் விடுவதில்லை
முடிந்தாலும் நிறுத்தவில்லை
நினைவுகளால் வதைப்பதும்
இறந்த நிஜங்களை மீண்டும் விதைப்பதும்
சுகமான வலி என்று கவிஞர் கூறினும்
வலிக்கிறதே வாழ்வே சலிக்கிறதே

Friday, August 27, 2010

pen தோழி

என் இனிய pen தோழியே
என் தோழியாய் பின் நின்று
என் வார்த்தையின் வளமை கண்டு
என் மீது உரிமை கொண்டு
என் எழுத்தை செதுக்கி
என் ஆற்றல் பெருக்கி
எனை ஆக்கினாய்
எழுத்தாளனாய்
என் தோழியாய் நீ இருப்பதினும்
என் pen தோழியாய் இருப்பதில்
இறுமாப்பு கொள்கிறேன்
:)

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...