Sunday, February 24, 2008

மனம்

சுவைக்கும் நாக்கு
நுகரும் மூக்கு
அணைக்கும் கரங்கள்
நடக்கும் கால்கள்
பார்க்கும் விழிகள்
கேட்கும் செவிகள்
பேசும் வாய்
யோசிக்கும் மூளை

என்று அனைத்து உறுப்புக்கும்
உருவம் கொடுத்த ஆண்டவன்
மனதுக்கு உருவத்தை கொடுக்கவில்லை
யோசித்தேன் ...........

நாக்கையும் மூக்கும்
வாயையும் விழியையும்
தன் கட்டுக்குள் வைத்து இருக்கும் manam
கடவுளின் நிகர்
எனவே உருவத்தை அழித்துவிட்டான்
உவமையாய் உலவ வைத்தான்

Tuesday, February 19, 2008

உடையதே மனமே

சிதறும் வென்மனிகள்
ஓடுகின்ற திசைகளை
கணிக்க முடியாது
கவனிக்க இயலாது

உடைந்த மனத்தின்
உதிர்ந்த உருவத்தை
உருவாக்க முடியாது
மீண்டும் ஓட்டவைக்க இயலாது

பெருதத ஏமாற்றம்
பேரலையாய் உயர்ந்து வந்து
உறுதி என்னும் சிறுதோனியை
ஓங்கி ஓங்கி அடித்து பார்க்கும்

அலை சீற்றம் அரை நாழி
நுரை மட்டும் கரை மிஞ்சும்
அதன் பின்னே தோணி அது
அழகாய் மீண்டும் மிதந்து ஓடும்
உடைந்தாலும் அது மனம்தான்
உருவம் இழந்தாலும் அது மனம்தான்

உடைந்தததில் உருவாவோம்
உறுதி தோணியில் பயணம் செய்வோம்

ஜன்னல் இருக்கை

இயற்கை உருவாக்கிய
அழகு தொலைகாட்சிபெட்டி

மின்சாரம் தேவை இல்லை
நிலையங்கள் thevai இல்லை
தணிக்கை தேவை இல்லை
கட்டணம் எதுவும் இல்லை

ஓடுகின்ற ஊர்திகளின் உள்ளுக்குள் அமர்ந்து கொண்டு
உலகத்தின் ஓட்டத்தினை உயிரோட்டத்துடன் ரசிக்க வைக்கும்

இருக்கையில் அமர்ந்த பின்னே நம்மை இயற்கில் ஆழ்த்தும்
இந்த இருக்கையின் மடி தாயின் மடி தன்னை நினைவு கூறும்

Monday, February 18, 2008

பேராசை பெரு நஷ்டம்

பேராசை பெரு நஷ்டம்
பெரியவர்கள் சொன்னார்கள்
இல மீசை வளர்ந்த நாளில்
இளம் பெண்கள் அனைவரையும்
தனதாக்கி கொள்ளும் நோக்கில்
தனை மறந்து தததாரியாய்
அவள் எண்ணம் மட்டும் கொண்டு
காதல்தான் பெரிது என்று
குறிக்கோளை தொலைததன்றி
குடும்பத்தின் மகிழ்ச்சி நீக்கி
தெருவோரம் சுவற்றிநினிலே
தினந்தோறும் அமர்ந்திருக்கும்
வருங்கால தூண்களாம்
இளங் காளையர் தம்மை
இரு கண்கள் காணும் புது
இதயத்தில் தோன்றும் கேள்வி
அவர் கூற்று உண்மை தானோ ?

இழக்கின்றேன் உறுதியை

கனவுகள் பலிக்கவில்லை
கண்களில் ஈர முல்லை
நினைவுகள் நிஜத்தில் இல்லை
நெஞ்சினில் ஏனோ தொல்லை

நிஜத்துக்கும் நிழலுக்கும் இன்று
தீராத போட்டி ஒன்று
தினம் தினம் நடந்து கொண்டு
நிம்மதி அழிக்குதென்று
புத்திக்கு தெரிந்த பின்னும்
புரியவில்லை எனக்கு இன்னும்
எத்திக்கில் செல்வேன் நானும்
இழக்கின்றேன் உறுதி திண்ணம்

தீவிரவாதம்

கண்களை GUN களாக்கி
பார்வை எனும் BULLET கொண்டு
பார்க்கும் ஆண்களை
பட்டாசைப் போல் சுட்டு தள்ளும்
பெண்கள்
தீவிரவாதிகள் தானே !!!

காதல்

பெண்ணவள் பேச்சது பேரின்பம் தருகிறதே
என்னவள் மூச்சினை என்று நான் சுவாசிப்பேன்
இங்ஙனம் கட்சிகள் இதயத்தில் எழுகிறதே
அங்ஙனம் நடக்குமா ஆசையோடு இருக்கின்றேன்
இரவோடு நிலவகி
இசையோடு சுவரமாகி
கடலோடு நுரையாகி
காற்றோடு தூசாகி
mazhaiyodu துளியாகி
பூவோடு நாராகி
புன்னகையின் சுகமாகி
உடலுக்குள் உயிராகி
உணர்வுக்குள் unarvaagi
நீயாகி நானாகி
வானாகி மண்ணாகி
வாய்ப்பாகி
வளர்ப்பாகி
நீயாகி
நானாகி தேனாகி thinaiyaagi
அண்ட சராசரம் அனைத்திலும் உயிர்த்து nirkum
உணர்வதனை "காதல் " என்றால் அது பாதகம் ஆகுமோ!!!

உன் சிரிப்பு

பூக்களின் இதழ்களை
பொறாமை கொள்ளச் செய்யும்
உன் சிரிப்பு
முத்து மணிகளை
தலை கவிழ வைக்கும்
உன் சிரிப்பு
வானவில்லை
இரு வண்ணத்தில் கொண்டது
உன் சிரிப்பு
என் இதயத்தில் ரத்தம்
அதிகமாய் பாய்ச்சும்
உன் சிரிப்பு
எதிரில் நின்றவரின்
உதிரம் குளிர வைக்கும்
உன் சிரிப்பு
கண்களின் பார்வையை
கட்டி போட்டு விடும்
உன் சிரிப்பு
பெண்களை ஆண்களை
மாற துடிக்க வைக்கும்
உன் சிரிப்பு
உலக அதிசயம் அனைத்தையும்
ஓரம் காட்டும்
உன் சிரிப்பு
என்னுயிர் இருப்பதை
நான் உணர வைப்பது
உன் சிரிப்பு

தனிமை

நன்கு சுவர் நண்பர்களோடு
தலையணை பெண்ணின் madiyil
தலை வைத்து தூங்குகையில்

இதயம் அதில் எதோ ஒரு
இனம் புரியாத வலி

உயிரற்ற பொருட்களிலே
உறவுகளை தேடி தேடி

உயிர் இருந்தும் பிணமாய் ஆனேன்
என்று நான் உயிர்த்தெழுவேன்

தீமையில் நன்மை தேடு

உறவுகள் பிரிவதற்கே உயிர் அது போவதற்கே

கலாம் அது கழிவதற்கே காதல் அது murivatharke

மனம் அது மறப்பதற்கே பணம் அது

ஒவ்வொரு நன்மைக்கும் ஒவ்வொரு தீமை உண்டு

தீமை அதை தீயில் போட்டு நன்மை அதை நட்டு வைத்தால்

உண்மையில் நன்மை அது உறுதியை உயிர்த்து நிற்கும்

Tholvigal

Veezthal enbathu tholvi alla
athu velvi
Veeznthalum vidhaiyovom
Maramaga uru mari
Mannirkku pala vidhai alipom

Tholviadainthavan thottravan alla
avan vettiyai izanthavan
Munaidhu muyarchithal Tholvi
enu thoni kondu
Vetri kadalil vellamai seiyalam

Muyarchi sey ! Mudangi vidhathey

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...