பூக்களின் இதழ்களை
பொறாமை கொள்ளச் செய்யும்
உன் சிரிப்பு
முத்து மணிகளை
தலை கவிழ வைக்கும்
உன் சிரிப்பு
வானவில்லை
இரு வண்ணத்தில் கொண்டது
உன் சிரிப்பு
என் இதயத்தில் ரத்தம்
அதிகமாய் பாய்ச்சும்
உன் சிரிப்பு
எதிரில் நின்றவரின்
உதிரம் குளிர வைக்கும்
உன் சிரிப்பு
கண்களின் பார்வையை
கட்டி போட்டு விடும்
உன் சிரிப்பு
பெண்களை ஆண்களை
மாற துடிக்க வைக்கும்
உன் சிரிப்பு
உலக அதிசயம் அனைத்தையும்
ஓரம் காட்டும்
உன் சிரிப்பு
என்னுயிர் இருப்பதை
நான் உணர வைப்பது
உன் சிரிப்பு
No comments:
Post a Comment