சிதறும் வென்மனிகள்
ஓடுகின்ற திசைகளை
கணிக்க முடியாது
கவனிக்க இயலாது
உடைந்த மனத்தின்
உதிர்ந்த உருவத்தை
உருவாக்க முடியாது
மீண்டும் ஓட்டவைக்க இயலாது
பெருதத ஏமாற்றம்
பேரலையாய் உயர்ந்து வந்து
உறுதி என்னும் சிறுதோனியை
ஓங்கி ஓங்கி அடித்து பார்க்கும்
அலை சீற்றம் அரை நாழி
நுரை மட்டும் கரை மிஞ்சும்
அதன் பின்னே தோணி அது
அழகாய் மீண்டும் மிதந்து ஓடும்
உடைந்தாலும் அது மனம்தான்
உருவம் இழந்தாலும் அது மனம்தான்
உடைந்தததில் உருவாவோம்
உறுதி தோணியில் பயணம் செய்வோம்
No comments:
Post a Comment