Wednesday, May 28, 2014

நன்றிகளும் நண்பர்களும் 
இவை இரண்டும் ஒன்று 
இருக்கும் போது இன்பம் கொடுக்கும் 
சற்றும் குறைந்தால் உன்னை புரட்டி  எடுக்கும் 
உணர்ச்சியில் உன்னோடு கலக்கும் 
உண்மையாய்  உன்னுடன் இருக்கும் 
வாழ்வினில் வலிகளின் மருந்தாகும்  
தோல்வியில் உன்னை தூக்கி நிறுத்தும் 
நீ கொண்ட நன்றிகளும் 
நீ கொண்ட நண்பர்களும் 
உனை தாங்கி பிடிக்கும் 
என்றும் உன்னுள் தேங்கி இருக்கும் 
என்னிடம் உள்ளது மனதாரா உங்களுக்கு நன்றிகள் 

என்னுடன் உள்ளனர் உமை போன்ற சிறந்த நண்பர்கள் 
சாடல் இல்லை 
ஊடல் இல்லை 
உள்ளே சிறிய நெருடல் 
வருடல்கள் ஆழமானால் 
வடுக்களை உருவாக்கலாம்
நெருடல்கள் ஆழமானால் 
நெஞ்சில் நெடும் சுவரை எழுப்பிவிடலாம்  
இதைத்தான் குறைப்பதாய் உரைத்தேன் 
அறுப்பதாய் எண்ணியது 
ஒருபோதும் நட்பை அல்ல 
நட்பை அறுப்பது என் கழுத்து 
நரம்பை அறுப்பது போல் 
அறுத்த உடன் ஓடி விடும் 
உயிர் தூக்கி குருதி 
நட்பு அறுந்துவிட்டால் நான் இல்லை 
அது மட்டும் உறுதி 
எதிர்பார்ப்பை குறைப்பதினால் 
ஏக்கங்கள் குறைகின்றன
நெஞ்சில் வாட்டங்கள் மறைகின்றன 
என்றே பறைந்தேன் 

உம் நட்பில் நான் கரைந்தேன் 

ஆத்திரக்காரன்




அதிகாலை அலாரத்தின் முன்பே எழுந்து
அதன் வாய் அடைத்து
அன்பு மனைவியின் ஆழ் தூக்கத்தை கலைத்து
அரை குறையாய் ஆகாரம் உண்டு
ஐந்து நிமிடம் கூட பொறுக்காமல்
இருமுறை பேருந்து மாற்றி
அலுவலகம் அடைந்து
மேலதிகாரியின் மின்னஞ்சலுக்கு
அரைகுறையாய் அவசரமாய்
பதில் கொடுத்து
இன்று குற்றவாளியாய் நிற்கும்
நான் நீ எல்லோரும் புத்தி மட்டானவர்கள்
மதியாத மனங்களை
மறந்திட நினைக்கும் உள்ளம்
உள்ளே பதியாத
நினைவுகளை அழித்திட நினைக்க எண்ணும்
உன் வாழ்க்கை கண்ணாடி
அதில் உடைந்திடும் கண்ணாடி மட்டும்
என்றும்
நிலையாக உன் பிம்பம் நிற்கும்
நினைவுகளை நீக்கி வீடு

உள்ள மகிழ்வுகளில் மூழ்கி ஏழு
=============================================================

பார்வையில் பழசானாலும்
பழங் கஞ்சி
குடித்த போது
பரிதாபம் என் மேல் இல்லை

படித்து முடித்து பின்னே
பன்னாட்டு வாசம் கொண்டு
பன் மொழிகள் பேசிக் கொண்டு
படித்தும் பதராய் நிற்கும்
இவனை
பார்த்தாலே பரிதாபம்

=============================================================


கவலை வரும் பொழுதும் காதல் வரும் பொழுதும்
கவிதை வரும்
முடிவாய் ஒன்றில் சிரிப்பு
ஒன்றில் சிறு நகைப்பு

இரண்டும் துன்பம் இரண்டும் இன்பம்
இதயம் அறியும் நன்றாய்
என் செய்யும் அதனை
இயக்குவது மூளை அல்ல இக் கோழை

விழுந்து எழும் குழந்தையாய்
விளக்கு நோக்கி போகும் வீட்டில் பூச்சியாய்
மனம்
நொடிந்தாலும் அடி விழுந்தாலும்

மீண்டும் தேடும் கவலையை / காதலை
காதணி விழா 

அன்பு மகள் என் மடியில்
அவள் அன்னையவள் என் அருகில்
எம் இருவர் எண்ணமெல்லாம்
எம் குழந்தை இன்னல் எண்ணி
ஆசாரி அருகில் வந்து
அன்பாய் அவள் காதை  தீண்டி
செல்லாமாய் சிரிக்க வைக்க
சில சில செய்கைகள் செய்கின்றார் 

என் மகளோ அவரை கண்டு
அடங்காத அச்சம் கொண்டு
அழுதிடத்தான் ஆரம்பித்தாள்
என்னுள் தனை நுழைத்து ஒளிந்து கொண்டாள்

கதறினாள் என் பெண்ணவள் 
அருகே பதறினாள் என்னவள்
எனக்குள்ளும்  உதறல்தான் இருப்பினும்
எண்ணம் சிதறாமல் நிறுத்தி நின்றேன் 
முடிவிலே தோல்வியுற்றாள் என் பெண்
காதிலே அணியை சேர்த்தார் அவள் கண் முன்

அழுததில் அயர்ந்து போனாள்
கண்கள் அயர்ச்சியில் உறங்கிப்  போனாள்
துவன்டதில் தூங்கும்  என் மழலையை உற்றுப் பார்த்தேன்
ஆதவன் காதல் கொள்ளும்
வெண்மதி வெட்கம் கொள்ளும்
விண்மீன்கள் சூழ்ந்து கொள்ளும்
சிறு ஒளி சிதறலாய் அவள் முகம்
அவள் அழகிற்கு அணி சேர்ப்பது போல்

அழகாய் சிறியதாய் காதணிகள்
பெற்றவளும் உற்றவளும்
உமது உடலின் இரு கை போல் 
ஒரு கையில் வலித்தாலும் அரித்தாலும் 
மறு கைதான் முயல வேண்டும் 
இடையில் உள்ள உடம்பு ஒரு காரணி 

இரு கையும் ஒன்றாகாது 
ஒன்றாயின் அது நன்றாகாது 
கரவொலி எழுப்பத்தான் கைகள் 
அதுபோல் மன வலி கொடுப்பதே உறவுகள் 
வலிகள் உமை பக்குவப் படுத்தும் 
பல உண்மையை உணர்த்தும் 
துவலாதீர் 

மனம் தளராதீர் 
முதியோர் இல்லம்

உயிர் கொடுத்த உன்னதர்கள்
உயிரோடு புதைக்கப்படும் இடம்

உணவு கிடைத்தாலும்
உயிர் இருந்தாலும்
தன் உதிரத்தின் உறவில்லாது
ஊமையான மனத்தோடு
ஈன்ற வயிற்றில் கணத்தோடு
தோலில் சுருக்கங்களோடும் 
மனத்தில்  இறுக்கங்களோடும்
எஞ்சி  நிற்கும் காலத்தினை
வெறும்  கஞ்சிக்காக கழித்திடும்
பிஞ்சு மனம் கொண்ட பெரியவர்களின்
மறைவிடம்

நமக்கு மெருகு ஏற்ற
தம்மை மெழுகாய் உருக்கியவர்கள்

இறுதி நாட்களிலும் எறிந்து கரியாகும் அடுப்பு  

Wednesday, April 10, 2013

என்னபோல உன்னைபோல

வேகாத வெயிலிலே வெள்ளை போட்டுக்கிட்டு
ஒரு கைல சொத்து மூட்டை
ஒரு தோளுல வேலைக்கான சாட்டை (அதான் மடிக்கணினி)
எப்ப பாரு கைபேசியிலே
தொன தொனனு ஒரே பேச்சு
நடுநடுவில் வெளிவருது பாவம் ஒரு பேரு மூச்சு
யாருக்காக வேலை செய்யற தாண்டவகோனே
இப்படி வேலை செஞ்சி என்னத்த கண்ட தாண்டவகோனே
புடிச்ச வேலை கெடைச்சதில்லை அது போவட்டும்
அட புடிச்சதையும் செய்றதில்லை எந்த மகமாரும்
சந்தோஷமா வாழப் பாரு அளவு இல்லாம
சங்கடங்கள் ஓடிப்போகும் உன் முன்னாடி நில்லாம
சட்டை கொலாய மாட்டிப்புட்டா சரியாய் போச்சுதா
இல்ல சாமியாரா போயிட்டாதான் சங்கடம் தீந்துதா
சாமி
சத்தியமா இருந்து பாரு சாந்தம் வந்தாடும்
சாமி கூட முன்னாடி வந்து சடுகுடு ஆடும்



மீண்டும் என் மகளுக்காக

உறங்கும் என் மகளை
உடன் அமர்ந்து
உற்று நோக்குகிறேன்
கனவில்லா அவள் உறக்கம்
அதில் கண் மூடா ஒரு கிறக்கம்
அன்பே நீ வளர்ந்தால்
உன் உறக்கமே கனவாகும்
உன் கனவில் தான் உறக்கம் வரும்
என் கனவே நீ என்றிருப்பேனா
இல்லை உன்னை கனவு காண வைப்பேனா
அறியேன் கண்ணே
என் ஐம்பொன் பெண்ணே

Monday, March 4, 2013

என் மகளின் முதல் ஒலிகள்

என் மகளின் முதல் ஒலிகள்

கேட்டதில் மயங்கின பச்சை கிளிகள்
கிள்ளை மொழி பேசியதில் இப் பிள்ளை
என் சொல்லை சூறையாடியது

சூதறியா சகுனி அவள்
பகடை இல்லா விரல்களினால்
எம்மை பரமபதம் ஆட்டுவிப்பாள்
ஏணி ஏறாமல்
பாம்பில் இறங்கவே மனம் விரும்பும்
அவள் விளையாட்டில் இறுதிவரை இருக்க வேண்டி
இயங்காத கருவிகளும் இசை எழுப்பும் இவள் குரலில்
மயங்காத மனதுகளும் மயங்கிவிடும் இவள் சிரிப்பில்

மண்ணுலகில் வந்துதித்த என் விண்ணுலக தேவதையே
உனை என் கண்களுக்குள் வைத்திருப்பேன்
என் கண்மணியாய் பார்த்திருப்பேன்




ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...