Sunday, October 26, 2014

டயட்
ஒரு வேளை மட்டுமே உணவருந்தி
உழவோட்டி வாழ்ந்தவனின்
உடலில் என்றும்
கொழுப்பில்லை அமிலமில்லை
உப்பில்லை ரத்த கொதிப்பில்லை
இன்றோ
இவை அனைத்தும் வந்ததால்
ஒரு வேளை சோறு மட்டும் மருந்தாய்
------------------------------------------------------------------------------
சுருங்கி போனது தீபாவளி
கைபேசியில் வெடிகளின் வீடியோக்கள்
தொலைகாட்சியில் சிறப்பு நிகழ்சிகள்
வாட்ஸ்ஆப்பில் வாழ்த்துக்கள் 
கிலோக்களின் வாங்கிய இனிப்புகள் இன்று கிராம் களில்
என
தரை இறங்கி வெடி வெடித்து
அண்டை வீட்டாருக்கு இனிப்பளித்து
அன்போடு பகிர்ந்த வாழ்த்துக்கள் போய்
இன்று நான்கு சுவர்களுக்குள் சுருங்கி போனது
தீபாவளி

------------------------------------------------------------------------------

தந்தைமை
தாய்மை போன்றா தந்தைமை
எதிர் வார்த்தை அல்ல இது நான் கண்ட புது வார்த்தை
தாய்மை தானாய் வருவது 
தந்தை மை நாம் வளர்த்தாலே வருவது
அன்னை அளவிற்கு தந்தையால்
அன்பளிக்க இயலாது தான்
ஆயினும் அன்றாடம் பிள்ளையிடம்
அன்பளிக்க வேண்டும்
அன்னையின் அரவணைப்பில்
பங்களிக்க வேண்டும்
பணி விட்டு வீடு
படி சேரும் போதே
மனம் வெள்ளை தாளாய்
குணம் மாற வேண்டும்
இல்லத்தின் உள்ளே
இன்ப தொழிற்சாலை உண்டு
அதில் எண்ணற்ற இன்பம்
தினம் உருவாகல் நன்று
பிள்ளை விரல் பற்றி
அவள்(ன்) கூட உலா சுற்றி
எல்லையில்லா இன்பம்
கொண்டு வாழ வேண்டும்
கொண்டவளின் தேவை
நமக்கு உண்டான மழலையின் தேவை
உறவுகளின் தேவை
இவை யாவும் முன்னுரிமை கோர்வை
இல்லறத்தில் நல்லறம் காண்
இல்லாளின் நலம் பெண்
ஈன்றவளுக்களிக்காதே ஊன்
தந்தை மை தலைமை
அதில் கொள் பொறுமை
தந்தையாய் கொள்வாய் பெருமை
---------------------------------------------------------------------------
அதிகாலை துயில் எழுந்து 
முக நூலில் உள் நுழைந்து 
உறக்கத்தில் உறைந்திருக்கும் 
மின் நண்பர்கள் தொடர்பைத் தேடி 
அன்றாடம் தொலைந்துவிடும் என் நேரம் 
அருகருகே எனை சுற்றும் புது நட்பை
புதுப்பிக்க ஏனோ தயங்கியது மனம்
----------------------------------------------------------------------------
என் மகள்
வளரும் என் மகளோடு நானும் வளர்கிறேன்
அவள் சிரிப்பில் உள்ள இனிமை பயில்கிறேன்
அவள் உள்ளம் கொண்ட இளமை அறிகிறேன் 
அவள் கிள்ளை மொழிகளில் நான் காதல் கொள்கிறேன்
அவள் போல நானும் தடுமாறி நடக்க முயல்கிறேன்
வீட்டில் அனைவருக்கும் அவள் கொடுக்கும் ஆனந்தம் போல்
நானும் மெது மெதுவாய் அனைவரையும்
மகிழ்விக்க விழைகிறேன்
எனக்கு பிறந்து என்னை பெற்றவள்
நாளை எனையும் தாண்டி வளர கற்றவள்
என் மகள் போல் ஒரு மகள் இவ்வுலகில் இல்லை
------------------------------------------------------------------------------
நண்பன்
நாலும் தெரிந்தவனில்லை
நமை தண்டி அறிந்தவனில்லை
போட்டி அவனிடம் இல்லை 
பொறாமை இல்லவே இல்லை
தோல்வி வரும் நேரம்
நம் தோளோடு தோளாய் நிற்பான்
வெற்றி வரும் நேரம்
நம் கால் இழுத்து தரையில் நிற்க வைப்பான்
குரல் கேட்கத் தேவை இல்லை
விழி பார்க்கத் தேவை இல்லை
நட்பின் உணர்வாலே உன்னை தேடி
ஓடி வருவான்
நண்பன்
நமக்கென்ன ஒரு நாளா நண்பர்தினம்
ஒவ்வொரு நாளுமே நண்பர்கள் தினம் தான் !!!

பதிலாய் என் நண்பன் எழுதியது 


குற்றங் களைவான் - நம்

குறைகள் மறப்பான்
வெற்றிக் களிப்பினிலே - மனம்
வேர்த்து இருக்கையிலே
உற்ற துணைவனவன் - நீர்
ஊற்றித் தணிப்பான்
சற்றுந் தளரான் - உளச்
சோர்வு துடைப்பான்.

சின்னத் தவறுகளை - புன்

சிரிப்பில் உடைப்பான்
என்ன இப்படியா - என
இடித்து உரைப்பான்
முன்னை நினைப்பான் - நமை
முழுதும் நிறைப்பான்
இன்னும் நெடுங்காலம் - உடன்
இருந்து பொறுப்பான்.

--------------------------------------------------------------------------------------




Wednesday, May 28, 2014

தனிமை
சுகம் இல்லாத சுமை
சுவை இல்லாத உணவு 
உடலுள்ளே மெதுவாய் புரையோடும் நோய்
உடைத்தெறிய வேண்டிய உணமையான அடிமை சங்கிலி 
நம் பின் வருவோருக்கு வழிகாட்டக் கூட ஒரே வழி
நமை நாமே நொந்துகொண்டும்
நம்முள் நாமே வெந்துகொண்டும்
இல்லாத ஆயுதத்தால் இதயத்தை இரண்டாகக் கிழித்தெறியும் 

ஒரு வேகம் குறைந்த சோகமான நிலை 
ஒரு தொலைபேசி தொடர்பில்
மூன்று அறிஞர் முப்பது முட்டாள்கள்
அறிஞர்கள் மூடரை அறியவில்லை
மூடர்கள் அறிஞரை அறிவதில்லை
மூச்சுவிட மறந்துவிட்டு முழு நாளும் பேசுகிறர்
முடிவில் என்னாகும்
மூடர் அறிஞர் ஆனரா
அறிஞரெல்லாம் மூடர் ஆனரா
மூடனாய் நானும்

முடிவறிய முயல்கிறேன்
அதிகாலை துயில் எழுந்து
அழகாய் உடை அணிந்து
அமைதியாய் அலுவலகம் போன காலங்கள்
கனவுகளில் மட்டுமே
வேலைப்பளு
குடும்ப சுமை
சுற்றத்தின் சூத்திரங்கள்
சுற்றவைக்கும் சாத்திரங்கள்
அதனால்
நம்மை அறுவடை செய்யும் ஆத்திரங்கள்
கர்மமும் தர்மமும்
நம்மை கவ்வி குதறி
மகிழ்ச்சி நெகிழ்ச்சி
எல்லாம் தூளாய் சிதறி
நாம் உறக்கத்தின் மேல் கூட
இறக்கம் இல்லாத
மன அழுத்தம்

மரண தேவனின் மறு உருவமோ  

தினமும்
எழுந்தது முதல்  வீழ்வது வரை
நொடி தோறும் நம் நாட்கள்
மடிக்கணினியுடன்

பிரியாத தோழியாயும்
சற்றும் பிடிக்காத வியாதியாயும்
இவள் பிடியை
தளர்த்தும்  இரு நாட்கள் நாளை முதல்
என்றென்னும் போது
வாரத்தின் இறுதி நாட்களும்
வாழ்க்கையின் இறுதி நாட்கள் போல்
அரிதாக

சற்றே பெரிதாக தோன்றியது
அதிகாலை எழுந்ததில்
அரைகுறையாய் உறக்கம்
ஒரு பக்கம் தலையின் ஓரம்
சற்றே மெதுவாய்தான் வலிக்கும்
இதில்
நுழைந்தது முதல் 
இருக்கை விட்டு எழுந்தது வரை
இடைவிடா தகவல் பரிமாற்றங்கள்
பங்கு சந்தை போல் உடல் நிலையில் ஏற்ற இறக்கங்கள்
பணி பற்றி பேசும் ந(ண்)பர்கள் பலர்
இதில் என் பிணி பற்றி கேட்க இங்கில்லை சிலர்

தனியாக சற்றே பிணியாக 
இருந்தும்
விரும்பாமல் போனாலும்
இவ்வுலக வியாபாரம் எனை வீழ்த்தியது
எழுத சொன்ன என் நண்பனுக்காக
என்னுள்ளே தோன்றியதை  
எனக்குள்ளே ஊன்றியதை
இரு வரியாய் இல்லாமல்
பல வரியாய் கிறுக்கி வந்தேன்
எதிர் பாரா நாள் ஒன்றில்
அதை பார்தத என் நண்பன் 
இறுமாப்பாய் சொன்னேன்
இதுதான் கவிதை என்று
என் எழுத்தை
முன்னிறுத்தி மேலும்  
எனை எழுத்த வைத்த நண்பன்
இன்றும் கூறினான்
இடைவிடாது எழுதுமாறு

மீண்டும் தொடங்குகிறேன்

அரசியல்


புரியாதவர்க்கு புதிர்
புரிந்தவர்க்கு எதிர்
வலியவிரின் இச்சை
எளியவர்க்கு  பிச்சை
நல்லோர் தொடா இடம்
உள்ளோர் விடா இடம்
வாழ்விலே கொண்டவர் வாழ்ந்து காட்டினர்
வாழ்வாய் கொண்டவர் வீழ்ந்து வாடினர்
இல்லறத்தில் வந்ததென்றால்
உள்ள இன்பம் கொள்ளை போகும்
நல்லறமாய் யாரும் செய்தால்
நாட்டுகென்றும் கொள்ளை லாபம்
வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு
கல்லா கட்ட நினைப்பவரின்
கைக்குள் மாட்டிக் கொண்டதால்

இன்று சாக்கடை என்று பேர் கொண்டது
நன்றிகளும் நண்பர்களும் 
இவை இரண்டும் ஒன்று 
இருக்கும் போது இன்பம் கொடுக்கும் 
சற்றும் குறைந்தால் உன்னை புரட்டி  எடுக்கும் 
உணர்ச்சியில் உன்னோடு கலக்கும் 
உண்மையாய்  உன்னுடன் இருக்கும் 
வாழ்வினில் வலிகளின் மருந்தாகும்  
தோல்வியில் உன்னை தூக்கி நிறுத்தும் 
நீ கொண்ட நன்றிகளும் 
நீ கொண்ட நண்பர்களும் 
உனை தாங்கி பிடிக்கும் 
என்றும் உன்னுள் தேங்கி இருக்கும் 
என்னிடம் உள்ளது மனதாரா உங்களுக்கு நன்றிகள் 

என்னுடன் உள்ளனர் உமை போன்ற சிறந்த நண்பர்கள் 
சாடல் இல்லை 
ஊடல் இல்லை 
உள்ளே சிறிய நெருடல் 
வருடல்கள் ஆழமானால் 
வடுக்களை உருவாக்கலாம்
நெருடல்கள் ஆழமானால் 
நெஞ்சில் நெடும் சுவரை எழுப்பிவிடலாம்  
இதைத்தான் குறைப்பதாய் உரைத்தேன் 
அறுப்பதாய் எண்ணியது 
ஒருபோதும் நட்பை அல்ல 
நட்பை அறுப்பது என் கழுத்து 
நரம்பை அறுப்பது போல் 
அறுத்த உடன் ஓடி விடும் 
உயிர் தூக்கி குருதி 
நட்பு அறுந்துவிட்டால் நான் இல்லை 
அது மட்டும் உறுதி 
எதிர்பார்ப்பை குறைப்பதினால் 
ஏக்கங்கள் குறைகின்றன
நெஞ்சில் வாட்டங்கள் மறைகின்றன 
என்றே பறைந்தேன் 

உம் நட்பில் நான் கரைந்தேன் 

ஆத்திரக்காரன்




அதிகாலை அலாரத்தின் முன்பே எழுந்து
அதன் வாய் அடைத்து
அன்பு மனைவியின் ஆழ் தூக்கத்தை கலைத்து
அரை குறையாய் ஆகாரம் உண்டு
ஐந்து நிமிடம் கூட பொறுக்காமல்
இருமுறை பேருந்து மாற்றி
அலுவலகம் அடைந்து
மேலதிகாரியின் மின்னஞ்சலுக்கு
அரைகுறையாய் அவசரமாய்
பதில் கொடுத்து
இன்று குற்றவாளியாய் நிற்கும்
நான் நீ எல்லோரும் புத்தி மட்டானவர்கள்
மதியாத மனங்களை
மறந்திட நினைக்கும் உள்ளம்
உள்ளே பதியாத
நினைவுகளை அழித்திட நினைக்க எண்ணும்
உன் வாழ்க்கை கண்ணாடி
அதில் உடைந்திடும் கண்ணாடி மட்டும்
என்றும்
நிலையாக உன் பிம்பம் நிற்கும்
நினைவுகளை நீக்கி வீடு

உள்ள மகிழ்வுகளில் மூழ்கி ஏழு
=============================================================

பார்வையில் பழசானாலும்
பழங் கஞ்சி
குடித்த போது
பரிதாபம் என் மேல் இல்லை

படித்து முடித்து பின்னே
பன்னாட்டு வாசம் கொண்டு
பன் மொழிகள் பேசிக் கொண்டு
படித்தும் பதராய் நிற்கும்
இவனை
பார்த்தாலே பரிதாபம்

=============================================================


ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...