Wednesday, May 28, 2014

தனிமை
சுகம் இல்லாத சுமை
சுவை இல்லாத உணவு 
உடலுள்ளே மெதுவாய் புரையோடும் நோய்
உடைத்தெறிய வேண்டிய உணமையான அடிமை சங்கிலி 
நம் பின் வருவோருக்கு வழிகாட்டக் கூட ஒரே வழி
நமை நாமே நொந்துகொண்டும்
நம்முள் நாமே வெந்துகொண்டும்
இல்லாத ஆயுதத்தால் இதயத்தை இரண்டாகக் கிழித்தெறியும் 

ஒரு வேகம் குறைந்த சோகமான நிலை 
ஒரு தொலைபேசி தொடர்பில்
மூன்று அறிஞர் முப்பது முட்டாள்கள்
அறிஞர்கள் மூடரை அறியவில்லை
மூடர்கள் அறிஞரை அறிவதில்லை
மூச்சுவிட மறந்துவிட்டு முழு நாளும் பேசுகிறர்
முடிவில் என்னாகும்
மூடர் அறிஞர் ஆனரா
அறிஞரெல்லாம் மூடர் ஆனரா
மூடனாய் நானும்

முடிவறிய முயல்கிறேன்
அதிகாலை துயில் எழுந்து
அழகாய் உடை அணிந்து
அமைதியாய் அலுவலகம் போன காலங்கள்
கனவுகளில் மட்டுமே
வேலைப்பளு
குடும்ப சுமை
சுற்றத்தின் சூத்திரங்கள்
சுற்றவைக்கும் சாத்திரங்கள்
அதனால்
நம்மை அறுவடை செய்யும் ஆத்திரங்கள்
கர்மமும் தர்மமும்
நம்மை கவ்வி குதறி
மகிழ்ச்சி நெகிழ்ச்சி
எல்லாம் தூளாய் சிதறி
நாம் உறக்கத்தின் மேல் கூட
இறக்கம் இல்லாத
மன அழுத்தம்

மரண தேவனின் மறு உருவமோ  

தினமும்
எழுந்தது முதல்  வீழ்வது வரை
நொடி தோறும் நம் நாட்கள்
மடிக்கணினியுடன்

பிரியாத தோழியாயும்
சற்றும் பிடிக்காத வியாதியாயும்
இவள் பிடியை
தளர்த்தும்  இரு நாட்கள் நாளை முதல்
என்றென்னும் போது
வாரத்தின் இறுதி நாட்களும்
வாழ்க்கையின் இறுதி நாட்கள் போல்
அரிதாக

சற்றே பெரிதாக தோன்றியது
அதிகாலை எழுந்ததில்
அரைகுறையாய் உறக்கம்
ஒரு பக்கம் தலையின் ஓரம்
சற்றே மெதுவாய்தான் வலிக்கும்
இதில்
நுழைந்தது முதல் 
இருக்கை விட்டு எழுந்தது வரை
இடைவிடா தகவல் பரிமாற்றங்கள்
பங்கு சந்தை போல் உடல் நிலையில் ஏற்ற இறக்கங்கள்
பணி பற்றி பேசும் ந(ண்)பர்கள் பலர்
இதில் என் பிணி பற்றி கேட்க இங்கில்லை சிலர்

தனியாக சற்றே பிணியாக 
இருந்தும்
விரும்பாமல் போனாலும்
இவ்வுலக வியாபாரம் எனை வீழ்த்தியது
எழுத சொன்ன என் நண்பனுக்காக
என்னுள்ளே தோன்றியதை  
எனக்குள்ளே ஊன்றியதை
இரு வரியாய் இல்லாமல்
பல வரியாய் கிறுக்கி வந்தேன்
எதிர் பாரா நாள் ஒன்றில்
அதை பார்தத என் நண்பன் 
இறுமாப்பாய் சொன்னேன்
இதுதான் கவிதை என்று
என் எழுத்தை
முன்னிறுத்தி மேலும்  
எனை எழுத்த வைத்த நண்பன்
இன்றும் கூறினான்
இடைவிடாது எழுதுமாறு

மீண்டும் தொடங்குகிறேன்

அரசியல்


புரியாதவர்க்கு புதிர்
புரிந்தவர்க்கு எதிர்
வலியவிரின் இச்சை
எளியவர்க்கு  பிச்சை
நல்லோர் தொடா இடம்
உள்ளோர் விடா இடம்
வாழ்விலே கொண்டவர் வாழ்ந்து காட்டினர்
வாழ்வாய் கொண்டவர் வீழ்ந்து வாடினர்
இல்லறத்தில் வந்ததென்றால்
உள்ள இன்பம் கொள்ளை போகும்
நல்லறமாய் யாரும் செய்தால்
நாட்டுகென்றும் கொள்ளை லாபம்
வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு
கல்லா கட்ட நினைப்பவரின்
கைக்குள் மாட்டிக் கொண்டதால்

இன்று சாக்கடை என்று பேர் கொண்டது
நன்றிகளும் நண்பர்களும் 
இவை இரண்டும் ஒன்று 
இருக்கும் போது இன்பம் கொடுக்கும் 
சற்றும் குறைந்தால் உன்னை புரட்டி  எடுக்கும் 
உணர்ச்சியில் உன்னோடு கலக்கும் 
உண்மையாய்  உன்னுடன் இருக்கும் 
வாழ்வினில் வலிகளின் மருந்தாகும்  
தோல்வியில் உன்னை தூக்கி நிறுத்தும் 
நீ கொண்ட நன்றிகளும் 
நீ கொண்ட நண்பர்களும் 
உனை தாங்கி பிடிக்கும் 
என்றும் உன்னுள் தேங்கி இருக்கும் 
என்னிடம் உள்ளது மனதாரா உங்களுக்கு நன்றிகள் 

என்னுடன் உள்ளனர் உமை போன்ற சிறந்த நண்பர்கள் 
சாடல் இல்லை 
ஊடல் இல்லை 
உள்ளே சிறிய நெருடல் 
வருடல்கள் ஆழமானால் 
வடுக்களை உருவாக்கலாம்
நெருடல்கள் ஆழமானால் 
நெஞ்சில் நெடும் சுவரை எழுப்பிவிடலாம்  
இதைத்தான் குறைப்பதாய் உரைத்தேன் 
அறுப்பதாய் எண்ணியது 
ஒருபோதும் நட்பை அல்ல 
நட்பை அறுப்பது என் கழுத்து 
நரம்பை அறுப்பது போல் 
அறுத்த உடன் ஓடி விடும் 
உயிர் தூக்கி குருதி 
நட்பு அறுந்துவிட்டால் நான் இல்லை 
அது மட்டும் உறுதி 
எதிர்பார்ப்பை குறைப்பதினால் 
ஏக்கங்கள் குறைகின்றன
நெஞ்சில் வாட்டங்கள் மறைகின்றன 
என்றே பறைந்தேன் 

உம் நட்பில் நான் கரைந்தேன் 

ஆத்திரக்காரன்




அதிகாலை அலாரத்தின் முன்பே எழுந்து
அதன் வாய் அடைத்து
அன்பு மனைவியின் ஆழ் தூக்கத்தை கலைத்து
அரை குறையாய் ஆகாரம் உண்டு
ஐந்து நிமிடம் கூட பொறுக்காமல்
இருமுறை பேருந்து மாற்றி
அலுவலகம் அடைந்து
மேலதிகாரியின் மின்னஞ்சலுக்கு
அரைகுறையாய் அவசரமாய்
பதில் கொடுத்து
இன்று குற்றவாளியாய் நிற்கும்
நான் நீ எல்லோரும் புத்தி மட்டானவர்கள்
மதியாத மனங்களை
மறந்திட நினைக்கும் உள்ளம்
உள்ளே பதியாத
நினைவுகளை அழித்திட நினைக்க எண்ணும்
உன் வாழ்க்கை கண்ணாடி
அதில் உடைந்திடும் கண்ணாடி மட்டும்
என்றும்
நிலையாக உன் பிம்பம் நிற்கும்
நினைவுகளை நீக்கி வீடு

உள்ள மகிழ்வுகளில் மூழ்கி ஏழு
=============================================================

பார்வையில் பழசானாலும்
பழங் கஞ்சி
குடித்த போது
பரிதாபம் என் மேல் இல்லை

படித்து முடித்து பின்னே
பன்னாட்டு வாசம் கொண்டு
பன் மொழிகள் பேசிக் கொண்டு
படித்தும் பதராய் நிற்கும்
இவனை
பார்த்தாலே பரிதாபம்

=============================================================


கவலை வரும் பொழுதும் காதல் வரும் பொழுதும்
கவிதை வரும்
முடிவாய் ஒன்றில் சிரிப்பு
ஒன்றில் சிறு நகைப்பு

இரண்டும் துன்பம் இரண்டும் இன்பம்
இதயம் அறியும் நன்றாய்
என் செய்யும் அதனை
இயக்குவது மூளை அல்ல இக் கோழை

விழுந்து எழும் குழந்தையாய்
விளக்கு நோக்கி போகும் வீட்டில் பூச்சியாய்
மனம்
நொடிந்தாலும் அடி விழுந்தாலும்

மீண்டும் தேடும் கவலையை / காதலை
காதணி விழா 

அன்பு மகள் என் மடியில்
அவள் அன்னையவள் என் அருகில்
எம் இருவர் எண்ணமெல்லாம்
எம் குழந்தை இன்னல் எண்ணி
ஆசாரி அருகில் வந்து
அன்பாய் அவள் காதை  தீண்டி
செல்லாமாய் சிரிக்க வைக்க
சில சில செய்கைகள் செய்கின்றார் 

என் மகளோ அவரை கண்டு
அடங்காத அச்சம் கொண்டு
அழுதிடத்தான் ஆரம்பித்தாள்
என்னுள் தனை நுழைத்து ஒளிந்து கொண்டாள்

கதறினாள் என் பெண்ணவள் 
அருகே பதறினாள் என்னவள்
எனக்குள்ளும்  உதறல்தான் இருப்பினும்
எண்ணம் சிதறாமல் நிறுத்தி நின்றேன் 
முடிவிலே தோல்வியுற்றாள் என் பெண்
காதிலே அணியை சேர்த்தார் அவள் கண் முன்

அழுததில் அயர்ந்து போனாள்
கண்கள் அயர்ச்சியில் உறங்கிப்  போனாள்
துவன்டதில் தூங்கும்  என் மழலையை உற்றுப் பார்த்தேன்
ஆதவன் காதல் கொள்ளும்
வெண்மதி வெட்கம் கொள்ளும்
விண்மீன்கள் சூழ்ந்து கொள்ளும்
சிறு ஒளி சிதறலாய் அவள் முகம்
அவள் அழகிற்கு அணி சேர்ப்பது போல்

அழகாய் சிறியதாய் காதணிகள்
பெற்றவளும் உற்றவளும்
உமது உடலின் இரு கை போல் 
ஒரு கையில் வலித்தாலும் அரித்தாலும் 
மறு கைதான் முயல வேண்டும் 
இடையில் உள்ள உடம்பு ஒரு காரணி 

இரு கையும் ஒன்றாகாது 
ஒன்றாயின் அது நன்றாகாது 
கரவொலி எழுப்பத்தான் கைகள் 
அதுபோல் மன வலி கொடுப்பதே உறவுகள் 
வலிகள் உமை பக்குவப் படுத்தும் 
பல உண்மையை உணர்த்தும் 
துவலாதீர் 

மனம் தளராதீர் 

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...